• August
    22
    Thursday

Main Area

pollachi rape
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: வீடியோவை வெளியிட்ட நக்கீரன் கோபால் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வீடியோவை வெளியிட்ட  நக்கீரன் கோபால் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

pollachi

பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களைப் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இருப்பினும்  முதன்முதலில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த வீடியோவை நக்கீரன் இணையத்தில்  வெளியிட்டது நக்கீரன் தான். இதனால் இவ்வழக்கில்  நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு  கோவை சிபிசிஐடி அலுவலகத்தில்  ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

hc

இதை எதிர்த்து நக்கீரன் கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சென்னையிலிருந்த அதிகாரி கோவைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து சம்மன் அனுப்புகிறார். இது தேர்தல் நேரத்தில் நக்கீரன் கோபாலின் பத்திரிகைப் பணிகளை முடக்கும் செயலாக உள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.  ஆனால் இந்த வழக்கு தொடர்பாகச் சென்னையில் வைத்து மட்டுமே விசாரிக்க வேண்டும்.தங்கள் தரப்பில் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம்' என தெரிவித்திருந்தார்.

gopal

இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சென்னையிலேயே நக்கீரன் கோபாலை விசாரிக்குமாறும், ஏப்ரல் 1ம் தேதி சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக நக்கீரன் கோபால் இன்று ஆஜரானார். 

cbi

முன்னதாக பொள்ளாச்சி வீடியோவை வெளியிட்டதற்கு, பெண் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தை இப்படி பொது வெளியில் வெளியிடலாமா? என்று சிலர் நக்கீரன் கோபால் மீது பாய, அதற்கு அவரோ, வீடியோவை வெளியிடக் கூடாது என்ற சமூக ஆர்வலர்களின் கருத்தை ஏற்க முடியாது. வீடியோவை வெளியிட்டதால் தான் உண்மை வெளியே வந்தது. குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது என்பதற்காகவே, வீடியோ வெளியிடப்பட்டது' என்று விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்களே உஷார்: நூதன திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள்; வீடியோ உள்ளே!

manikkodimohan Mon, 04/01/2019 - 18:31
nakkheeran gopal Nakkheeran gopal cbcid pollachi rape cbcid நக்கீரன் கோபால் தமிழகம்

English Title

pollachi rape case: Nakkheeran gopal appear cbcid office

News Order

0

Ticker

0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கோவை எஸ்.பி பாண்டியராஜன் அதிரடி மாற்றம்!

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
abuse

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிட்ட கோவை எஸ்பி 
pollachi

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிடுவதன் மூலம், பாதிக்கப்பட்ட மற்றவர்களை மிரட்டக் குற்றவாளிகள் நினைப்பதாகவும், அதற்கு கோவை எஸ்பி பாண்டியராஜன் ஒத்துழைப்பு அளித்ததாகவும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. 

 பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை 
hc

இதனால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  என்பவர் இது போன்று இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம். அதனால் கோவை எஸ்பி மற்றும் அரசாணை  வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்தரியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரம் தொடர்பாக எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

பணியிடமாற்றம்
kovai sp

இந்நிலையில்   கோவை எஸ்பி பாண்டியராஜன் இன்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுக் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் பொள்ளாச்சி டிஎஸ்பி, மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். 

அதே சமயம் கோவைக்கு புதிய எஸ்.பியாக சுஜித் குமாரும், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க:  அன்புமணியை பார்த்து கேள்வி கேட்ட அதிமுக நிர்வாகி: வாயில் அடித்த முன்னாள் அமைச்சர்; வைரலாகும் வீடியோ!

manikkodimohan Mon, 04/01/2019 - 12:08
pollachi rape COIMBATORE Transfered sp pandiyarajan பாண்டியராஜன் தமிழகம்

English Title

coimbatore sp pandiyarajan transferred

News Order

0

Ticker

0 
ஸ்டாலினுடன் மணிமாறன்

பொள்ளாச்சி விவகாரம்: அ.தி.மு.க.வை தொடர்ந்து தி.மு.க நிர்வாகி மகனுக்கு சம்மன்; அதிர்ச்சியில் தி.மு.க தலைமை!

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் திமுக நிர்வாகியின் மகனுக்கு சிபிசிஐடி போலீசார்  நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: கோவை எஸ்.பி மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட,  கோவை எஸ்பி மற்றும் தமிழக உள்துறை செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி  வன்கொடுமை
abuse

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
hc

இதை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதனால் வழக்கறிஞர் சூரிய பிரகாசம்  இது போன்று இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம்.அதனால் கோவை எஸ்பி மற்றும் அரசாணை  வெளியிட்ட உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு
ttn

இந்த மனு நீதிபதி இளந்திரையன் அமர்வின் முன்னிலையில்  வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் அரசாணை வெளியிட்டதால் அப்பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணுக்குத் தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்க: மாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது
 

manikkodimohan Sat, 03/23/2019 - 17:18
Pollachi Sexual harassment Pollachi AssaultCase sp pandiyarajan pollachi rape  கோவை எஸ்பி பாண்டியராஜன் தமிழகம்

English Title

petition filed by the madras hc against coimbatore sp pandiarajan and tn home secretary

News Order

0

Ticker

0 பொள்ளாச்சி விவகாரத்தை பேசாமல் இருப்பதே நல்லது ! சர்ச்சையைக் கிளம்பும் சமந்தா !

சென்னை: பொள்ளாச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என்று நடிகை சமந்தா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி விவகாரம்
pollachi

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைத்தது.  இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும்  இவ்விவகாரம் குறித்து இன்னும் சிபிசிஐடி போலீசார் தான் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சமந்தாவின் சர்ச்சை கருத்து 
samantha

இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாமானிய மனிதன் வரை ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்து ஆளுங்கட்சியைக் கிடுகிடுக்க வைத்தது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களோ பல்வேறு திரைத்துறையினரிடம் கருத்துக் கேட்டு வருகின்றது. அந்த வகையில், நடிகை சமந்தாவிடம் செய்தி நிறுவனம் ஒன்று பொள்ளாச்சி விவகாரம் குறித்து கருத்துக் கேட்டுள்ளது. அதற்கு பதிலளித்த சமந்தா, 'அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்குத் தெரிந்த அந்த சம்பவம், நான் பேசினால் பல லட்சம் பேருக்கு தெரியும். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும்.அதனால் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசி வருகிறேன்' என்று பதிலளித்துள்ளார்.

கடுப்பான நெட்டிசன்ஸ்
samantha 2 ttn

சமந்தாவின் இந்த பதில் தான் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்களோ, உங்கள் வீட்டிலோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இது போன்று ஒரு சம்பவம் நடந்தால் இப்படி தான் பேசியிருப்பீர்களா? வீணாப்போன நடிகை ஸ்ரீரெட்டி கூட இதற்காக குரல் கொடுத்து வருகிறார்? ஆனால் நீங்களோ புத்திசாலித்தனமாகப் பேசுகிறேன் என்ற பெயரில் இது போன்ற தேவையற்ற கருத்துக்களைப் பரப்புவதா? என்று சாடி வருகின்றனர். 

பாலியல் குற்றத்திற்கு நிகரானது
abuse

சமந்தாவின் இந்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக பார்க்கப்பட்டாலும், இது போன்று  சமூகத்தைச் சீர்குலைக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது ஏற்புடையதல்ல. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தோமேயானால், இது போன்ற பிரபலங்களின் கருத்துக்கள் எளிதில் மக்களை போய் சென்றடைந்து விடும். அதனால் தான் இவர்களிடம் இந்த கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது கூட பாலியல் குற்றத்திற்கு நிகரானதுதான். 

உயர்நீதிமன்ற மதுரை கிளையே நிர்பயா வழக்குக்கு அளித்த முக்கியத்துவம் பொள்ளாச்சி வழக்கு அளிக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கும் நிலையில், நடிகை ஒருவர் இது போன்று பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது பார்த்து பேசுங்க சமந்தா மேடம்?!
 

manikkodimohan Fri, 03/22/2019 - 13:23
Pollachi rape case pollachi rape actress samantha crime நடிகை சமந்தா சினிமா

English Title

reason why actress samantha didnt talk about pollachi issue - fans shocked

News Order

0

Ticker

0 பொள்ளாச்சி, ரஃபேல் விவகாரம்; ஊடக தர்மம் குறித்து அமீர் தடாலடி பேட்டி!

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் ஊடகங்கள் தங்களது பணியை சரியாகவே செய்துள்ளது என இயக்குனரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பயங்கரம்:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினர் தீவிரம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

pollachi

இது தொடர்பான நெஞ்சை பதைபதைக்க செய்யும் பெண்ணின் கதறல் அடங்கிய வீடியோவை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார்.

ஊடக தர்மம்:

இந்நிலையில் இதுகுறித்து வார இதழ் ஒன்றுக்கு நடிகர் அமீர் அளித்துள்ள பேட்டியில், பொள்ளாச்சியில் நடைபெற்றது திட்டமிட்ட குற்றம். ஒரு குற்றம் அரசியல் பின்புலத்தின் மூலம் மறைக்கப்படும் பட்சத்தில் அதனை வெளியே கொண்டு வருவது தான் பத்திரிகையின் கடமை. பெண்ணின் முகம் மார்பிங் செய்யப்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இது ஊடக தர்மமே என்று தெரிவித்துள்ளார்.

nakkeeran

மேலும் அவர் பேசுகையில், நாட்டின் ஒவ்வொரு துறையும் அவர்களது பணியை செய்ய வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் தலையீடுகள் இருந்தால் அது சரியாக இருக்காது. அரசியல் மட்டுமே நாடு அல்ல. எம்.பி.,-க்கள், எம்.எல்.ஏ.-க்கள் மக்களுக்கான பிரதிநிதிகள். நமக்காக தான் அவர்கள்; அவர்களுக்காக நாம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விவகாரம்:

ரஃபேல் விவகாரம் குறித்து பேசிய அமீர், ஊழல் நடக்கவே இல்லை என மத்திய அரசு கூறுகிறது. ஆனால், ராகுல்காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். சில ஆவணங்களை காணவில்லை என அரசு கூறுகிறது. பின்னர் அந்த ஆவணங்கள் பிரதி எடுக்கப்பட்டு வந்துவிட்டது என அரசு கூறுகிறது. ரஃபேல் ஊழல் குறித்து சில தகவல்களை பத்திரிகையாளர் என்.ராம் வெளியிடுகிறார். குற்றத்தை வெளியே கொண்டு வர வேண்டியது பத்திரிகையின் கடமை தானே. இதனை செய்யாமல் இருந்தால் தான் பத்திரிகை துறையை கேள்வி கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ram

ஏதோ ஒரு பெண்ணுக்கு அல்லது ஒரு பெண்ணை ஏமாற்றிய சம்பவம் அல்ல பொள்ளாச்சி விவகாரம் என சுட்டிக் காட்டும் அமீர், நட்பு, காதல், ஆசை வார்த்தைகளை காட்டி நயவஞ்சகமாக செய்த குற்றம். வீடியோ எடுத்து மிரட்டி கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து, பணம் பறித்து, பின்னர் மற்றவர்களுக்கு அப்பெண்களை பகடைக்காயாக உபயோகித்துள்ளனர். இதுபோன்ற குற்றங்களை வளர விடுவது சரி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஏன் கொந்தளிக்க போகிறார்கள்:

இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மக்கள் கொந்தளித்திருக்க மாட்டார்கள். தலைமைறைவாக இருந்த இந்த குற்றத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசு வெளியிட்ட வீடியோவில் இதில் அரசியல் கட்சிகள் இருக்கிறது என கூறுகிறார். எனவே, சந்தேகங்கள் எழுகிறது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை. அவர்கள் விளக்கமளிக்காத பட்சத்தில் பத்திரிகைகள் மூலமாக அவை வெளியே வருகிறது. ஊடகம் தனது கடமையை செய்கிறது. தங்கள் மீது தவறு இல்லை என்றால் நீதிமன்றம் மூலமாக நிரூபிக்கலாம். அதை விடுத்து நக்கீரன் மீது புகார் கொடுப்பது அதிகார துஷ்பிரயோகம் என்றும் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தான் அரசு:

pollachiprotest

மக்கள் எழுச்சி, அறிவுக்கூர்மையை எந்த அரசும் விரும்புவது இல்லை என தெரிவித்துள்ள அமீர், அரசை பொறுத்தவரை ஒட்டு போடணும், அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், மக்கள் அடிமையா இருக்கணும், சுதந்திரமா இருக்க கூடாது, தன்னெழுச்சியாக எதையும் செய்து விட கூடாது என்றும் சாடியுள்ளார்.

smprabu Sat, 03/16/2019 - 13:26
Ameer pollachi rape sexual abuse journalism அமீர் (கோப்புப்படம்) சினிமா தமிழகம்

English Title

Ameer interview about Pollachi rape, Rafale scam

News Order

0

Ticker

0 உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி; பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக-வினரை விளாசும் கமல்!-வீடியோ

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அதிமுக-வினரை சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து, அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாகவும், குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியினர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை கோவை எஸ்.பி., பாண்டியராஜன் வெளியிட்டதும், அப்பெண்ணின் சகோதரரை அதிமுக நிர்வாகி பார் நாகராஜ் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறின. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆனால், காவல்துறையின் செயல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டால், எப்படி மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வருவார்கள் என மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதேபோல், பாலியல் வன்கொடுமை உள்ளாக்கபட்ட பெண்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டு விட்டதாக காவல்துறை கூறிய நிலையில், மேலும் இரண்டு வீடியோக்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், எங்களது தலையீடு இல்லை என்று கூறுவதில் ஆளுங்கட்சியினர் காட்டும் அக்கறை, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் இல்லை என்ற விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஆளுங்கட்சியினரை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பெண்கள் பாதுகாப்பை உறதி செய்றேன்னு சொன்ன ஜெயலலிதா புகைப்படத்தை பாக்கெட்டில் வைத்திருக்கும் நீங்கள் இந்த விவகாரத்தில் பெண்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். கட்சியின் தலைவராக இதனை கேட்கவில்லை, இரு பெண்களின் தந்தை என்ற பெயரில் கேட்கிறேன். என்ன செய்து இந்த தவறுகளுக்கு பரிகாரம் தேட போறீங்க. உங்க அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தை எப்படி துடைக்க போறீங்க சாமி" என அதிமுக-வினரை சரமாரியாக சாடியுள்ளார்.

முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பேரணியாக சென்று பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தனர். அதேபோல், இந்த சம்பவம் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஜிபி ராஜேந்திரனை நேரில் சந்தித்து கமல்ஹாசன் வலியுறுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

smprabu Thu, 03/14/2019 - 22:14
Makkal Needhi Maiam KamalHaasan pollachi rape aiadmk கமல்ஹாசன் தமிழகம்

English Title

Pollachi rape case: kamalhaasan criticises aiadmk government and released video

News Order

0

Ticker

0 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ; பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன்!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வான்கொடுமை விவகாரத்தில், நக்கீரன் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கோபாலுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவரை அதிமுக அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், நாளை காலை 11 மணிக்கு அவர் சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

smprabu Thu, 03/14/2019 - 21:08
Nakkeeran gopal pollachi rape pollachi video நக்கீரன் கோபால் (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Pollachi rape video: TN Police Summons Nakkeeran Gopal

News Order

0

Ticker

0 
சபரீசன் (கோப்புப்படம்)

சபரீசன் மீது வழக்குப்பதிவு; பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சபரீசன் வக்கீல் நோட்டீஸ்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; தமிழக அரசு அரசானை

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன் என வீடியோ வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தின. மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து  வருகின்றனர்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், வழக்கின் விசாரணையை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டார். பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவெடுத்தது. அந்த வகையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசானை பிறப்பித்துள்ளது.

smprabu Thu, 03/14/2019 - 14:49
pollachi rape sexual abuse CBI Tamilnadu Government பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தமிழகம்

English Title

Tamilnadu Government orders Pollachi rape case to transfered to CBI

News Order

0

Ticker

0 
கோப்புப்படம்

பாலியல் குற்றவாளியை பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில் சித்தரவதை செய்து கொல்ல வேண்டும்; கொதிக்கும் மக்கள்!

பாலியல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில், குற்றவாளியை சித்தரவதை செய்து கொலை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கிய...

காமுகன் பார் நாகராஜ் வீடியோக்கள் வெளியானது; பொள்ளாச்சியில் போட்டியிட அஞ்சும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகள்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ் பெண்கள் வன்கொடுமை செய்யும் மூன்று வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுடன் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி, காதலிப்பதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து அந்த பெண்களை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. இது தொடர்பான இரண்டு வீடியோக்கள் வெளிவந்தது. வீடியோவில் இருக்கும் பெண்ணின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்தது.

pollachi

தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முதலில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசு, இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்புகள் உள்ளன. விரைவில் உண்மையைச் சொல்வேன் என வீடியோ வெளியிட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களைத் தொடர்பு படுத்தி பேசப்படுவது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தன் குடும்பத்தினர் மீதான விமர்சனத்தை பொள்ளாச்சி ஜெயராமன் மறுத்திருக்கிறார்.

pollachijayaraman

ஆனால், இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி தீவிரம் காட்டுவதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தவிர, மாநிலம் முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் புகார் கொடுத்த பெண்ணின் விவரத்தை காவல்துறை கசியவிட்டதால், அப்பெண்ணின் அண்ணனை, சிலர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக, செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (20), நாகராஜ் (26) ஆகிய நான்கு பேரைக் கைது செய்தது போலீஸ். இதில் நாகராஜ் பொள்ளாச்சி 34-வது வட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர். தாக்குதல் புகாரில் கைதான நான்கு பேருமே மூன்று நாள்களில் ஜாமீனில் வெளிவந்து விட்டனர்.

barnagaraj

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவரை கைது செய்து, தகுந்த வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, இவருக்கு சொந்தமான பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

bar

இந்நிலையில், காமுகன் பார் நாகராஜ் பெண்கள் வன்கொடுமை செய்யும் மூன்று வீடியோக்கள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோக்களை கைது செய்யப்பட்டுள்ள இவரது கூட்டாளிகள் மறைந்திருந்து எடுத்துள்ளனர். அந்த வீடியோவில், இணங்க மறுத்த பெண்ணை மிரட்டுவது போன்றும், அடுத்த முறை அழைக்கும் போது வரவேண்டும் என அப்பெண்ணை அவர்கள் மிரட்டுவது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது வீடியோ வெளியாகியுள்ளதால் பார் நாகராஜனை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

barnagaraj

அதேசமயம், எதிர்வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் அரசியல் கட்சிகளின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. அதிமுக-வின் கோட்டை “கொங்கு மண்டலம்” என்று அழைக்கப்படும் இந்த பகுதிக்குள் தான் பொள்ளாச்சி தொகுதியும் வருகிறது. இந்த தொகுதியின் எம்.பி.,-யாக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த மகேந்திரன்.

மக்களவை தேர்தலுக்காக அதிமுக-பாஜக-பாமக-தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ஆளுங்கட்சிக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் இக்கட்சிகள் தொடர் மவுனத்தையே தந்து வருகிறது. தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். எப்போதும் இதுபோன்ற விவகாரங்களில் காட்டமாக அறிக்கை விடும் பாமக, பட்டும்படாமல் அறிக்கை விட்டுள்ளது. இதையெல்லாம்  கவனிக்கும் தொகுதி மக்கள் ஒரே கூட்டணியில் இருக்கும் இக்கட்சிகள் மீது ஆதங்கத்தில் இருப்பதாகத் தகவல்கள்  வெளியாகின்றன.

செல்வாக்கு மிகுந்த தொகுதியாக இருந்தாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால் பொள்ளாச்சி தொகுதியை பாஜக மற்றும் பாமக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட அதிமுக முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் கூட தற்போது இருக்கும்  நிலையில், பின் வாங்குவதாக செய்திகள் வெளி வருகின்றன. எனவே, தொகுதி மக்களிடம் அதிருப்தியும், நல்ல அபிப்பிராயமும் இல்லாத சிட்டிங் எம்.பி.,-யான மகேந்திரனுக்கு மீண்டும் சீட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

dmkprotest

திமுக-வை பொறுத்தவரை தி.மு.க. நகர செயலாளர்  தென்றல் செல்வராஜ் சீட் கேட்டிருக்கிறார். ஸ்டாலினுக்கு நெருக்கமான இவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அதுவே அக்கட்சிக்கு பிரசாரங்களுக்கு போதுமானது. எனவே, அவருக்கு சீட் வழங்கப்படலாம் என தெரிகிறது.

பாலியல் விவகாரத்தில் மக்கள் கொதித்துப்போய் இருக்கும் நிலையில் தேர்தல் பற்றி பேசுவது சரியாக இருக்காது என ஒருமித்த குரலில் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர்.

smprabu Wed, 03/13/2019 - 19:47
pollachi rape sexual abuse aiadmk bar nagaraj வீடியோவில் உள்ள பார் நாகராஜ் தமிழகம்

English Title

Pollachi rape: Bar nagaraj video released; AIADMK alliance parties are afraid about to contest pollachi parliament constituency

News Order

0

Ticker

0 
ஸ்ரீதர்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை: சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. திட்டவட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாரபட்சமற்ற நேரமையான விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. ஸ்ரீதர் திட்டவட்டம் தெரிவித்துள்ளார்


நாசர் (கோப்புப்படம்)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவுரை!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது


பேரணியாக சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம்; மக்கள் நீதி மய்யம் பேரணி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் பேரணி நடத்தப்பட்டது

2018 TopTamilNews. All rights reserved.