• April
    05
    Sunday

Main Area

Main



அப்பாவியை ஆபாச படமெடுத்தனர் -ஆயிரக்கணக்கில் ஆட்டைய போட்டனர் -போலீஸ் வேடத்தில் ப்ளூ பிலிம் ....   

representative image
representative image

மூன்று பேர் தங்களை பஞ்சாப் காவல்துறை என்று கூறிக்கொண்டு, ஒரு அப்பாவியை வைத்து ஆபாச படமெடுத்து, அவரிடமிருந்த ஏடிஎம் கார்டையும் பணத்தையும் பறித்துகொண்டு, அவரை வைத்து எடுத்த ஆபாச வீடியோவை வைரலாக்கிவிடுவதாக மிரட்டி, மேலும் பணம் கேட்ட ஒரு கும்பலை போலீஸ் தேடுகின்றனர்.  

இந்த வழக்கில் கிடைத்த தகவல்களின்படி, இந்த சம்பவம் பெராஸ்பூர் நகரின் வீட்டுவசதி வாரிய காலனியில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது., பாதிக்கப்பட்ட அமர்ஜீத் சிங் போலீசாருக்கு அளித்த புகாரில், “ஜனவரி 15 ஆம் தேதி, அவர் ஃபெரோஸ்பூர் நகரத்திற்கு வந்தபோது, ஒரு பெண் தன்னை ஒரு நண்பரின் வீட்டில் விடும்படி கூறியதாகவும், அதனால் அவர் அந்தப் பெண்ணை வீட்டுவசதி வாரிய காலனியில் உள்ள நண்பரின் வீட்டில் விட்டுவிட்டாராம் அப்போது அந்தப் பெண் அவரை வீட்டில் உட்காரச் சொல்லி  அவருக்கு தேநீர் கொண்டு வந்தார்" என்று கூறினார்.

அமர்ஜீத் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு 3 பேர் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவர் காக்கி தலைப்பாகை அணிந்திருந்தார், 3 பேரும் தங்களை பஞ்சாப் போலீஸ் என்று கூறினர்.. அந்த 3 பேரும் அவரை திடீரென மிரட்டி, நிர்வாணமாக்கி, அந்தப் பெண்ணுடன் ஒரு ஆபாச வீடியோவை எடுத்தனர். உடனே அவர்கள் அமர்ஜீத்திடம் வீடியோவை காமித்து,  பிளாக்மெயில் செய்து, அவரிடமிருந்த  இருந்த 4 ஆயிரம் ரூபாயையும் ஏடிஎம் கார்டையும் எடுத்துக் கொண்டார்கள் . 
இந்த வழக்கில், அமர்ஜீத் கூறுகிறார்," இப்போது கூட, அவர்கள் போன் செய்து, பணம் கொடுக்கப்படாவிட்டால் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிடும் என்று அச்சுறுத்துகிறார்கள் ". என்றார். அமர்ஜீத்தின் புகாரில் குற்றவாளிகள்  சுகா சிங், அமன்தீப் என்றும் அவர்களோடு  தீப்பு, டிங்கு என 2 பெண்களையும் குறிப்பிட்டுள்ளார்,

2018 TopTamilNews. All rights reserved.