• October
    15
    Tuesday

Main Area

Main



தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு : சவால் விட்ட உதயநிதி; செய்து காட்டிய எடப்பாடி

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: தேர்தல் நடத்தை விதியை மீறியதாக  உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மக்களவை தேர்தல்
stalin

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து முக ஸ்டாலின் பிரசாரம் செய்வதும், அதிமுக கூட்டணிக் கட்சியான பாமகவுக்காக முதல்வர் எடப்பாடி களமிறங்கியதும் தேர்தல் பிரசாரத்தைக் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. 

உதயநிதியின் தொடர் பிரசாரம்
udhyanidhi

இதனிடையே திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக நடிகரும் மு.க.ஸ்டாலினின் மகனுமான, உதயநிதி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

உதயநிதி மீது வழக்குப் பதிவு
udhay

இந்நிலையில்  கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் கடந்த 23-ந்தேதி தி.மு.க வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிரசாரம்  மேற்கொண்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் முகிலன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் 143, 341,188 ஆகிய பிரிவுகளின் கீழ் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சவால்  விட்ட உதயநிதி 
udhya

முன்னதாக அதே நாள் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கூட அதிமுக நிர்வாகிக்குத் தொடர்பு உள்ளது எனப் பகிரங்கமாகக் கூறுகிறேன் முடிந்தால் வழக்குப் போட்டுப் பாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்: டிசர்ட்டில் அழகிரி, ஆனாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்; வைரல் போட்டோ!

2018 TopTamilNews. All rights reserved.