• February
    29
    Saturday

Main Area

Main



பெண் பத்திரிகையாளரைத் தாக்கிய போக்சோ குற்றவாளி!

REpresentative Image
REpresentative Image

2013 ஏப்ரல் மாதத்தில் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. மனோஜ்ஷா, b பிரதீப்குமார் என்கிற இருவர், டெல்லி காந்தி நகர் பகுதியிலிருந்து ஒரு 5 வயது சிறுமியை கடத்தி வந்து பாலியல் வல்லுறவு கொண்டிருக்கிறார்கள்.அந்த குழந்தை வலியில் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 40 மணிநேரம் கழித்து 2013 ஏப்ரல் 17ம் தேதிதான் அந்த சிறுமியை கண்டுபிடித்துக் காப்பாற்றினார்கள். டெல்லியை விட்டு தப்பி ஓடிவிட்ட மனோஜை முஸாபர் நகரிலும், பிரதீப்பை தர்பாலிகாவிலும் டெல்லி போலீஸ் கைது செய்தது. அந்த வழக்கில் சனிக்கிழமை டெல்லி காகர்டூமா கோர்ட்டில் விசாரணைக்குப் பிறகு வெளியே கொண்டு வரப்பட்டார்கள், மனோஜும், பிரதீப்பும். அப்போது அவர்களைச் பபத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு படம் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த குற்றவாளி எதிரில் இருந்த பெண் உட்பட மூன்று பத்திரிகையாளர்களை முகத்தில் குத்தினான். அதன் பிறகு போலீசார் அவர்களை கட்டுப்படுத்தி அழைத்துச் சென்றனர். பத்திரிகையாளர்கள் இது குறித்து நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.