• March
    29
    Sunday

Main Area

Main



சீனாவிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு....

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சீனாவில் கடந்த வாரம் வரை கொரோனாவைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். சீனாவில் தங்கியிருக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்தது. இதற்காக ஏர் இந்தியா கடந்த மாதம் 31ம் தேதி மற்றும் இம்மாதம் 1ம் தேதிகளில் 2 சிறப்பு விமானங்களை இயக்கியது.

விமானத்தில் வந்த இந்தியர்கள்

சீனாவின் யுஹான் நகரிலிருந்து அண்மையில் 647 இந்தியர்கள் மற்றும் 7 மாலத்தீவு நாட்டினரை ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களில் டெல்லிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இந்த பணியில் ஏர் இந்தியாவின் 30  கேபின் பணியாளர்கள், 8 விமானிகள், 10 வர்த்தக பணியாளர்கள் மற்றும் ஏர் இந்தியாவின் சி.ஏ.டி. செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என மொத்தம் 64 பேர் ஈடுபட்டனர். மேலும் சுகாதார துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் இந்த பணியில் பங்கேற்றனர்.

விமான பணியாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள்

சீனாவிலிருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வந்த ஏர் இந்தியா மற்றம் சுகாதார துறை அமைச்சக அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.