• February
    25
    Tuesday

Main Area

Main



சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற 12 ஆம் வகுப்பு மாணவன்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

 வன்கொடுமை
வன்கொடுமை

திண்டுக்கல்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மாணவன் ஒருவன் கைதாகியுள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த 7 வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரது உடலில் காயங்களும், ரத்த கறைகளும் இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணையை  தொடங்கினர்.

police

இந்நிலையில் முதற்கட்ட விசாரணையில் சிறுமியை அதேபகுதியைச் சேர்ந்த கிருபானந்தன்  என்ற 12 ஆம் வகுப்பு முடித்த மாணவன் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.  சம்பவத்தின் போது, உயிருக்குப் போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

crime

இதையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கிருபானந்தனை போலீசார்  கைதுசெய்துள்ளனர். மாணவன் ஒருவன் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது வடமதுரை பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

2018 TopTamilNews. All rights reserved.