• August
    21
    Wednesday

Main Area

Main



அண்ணலும் நோக்க, அவளும் நோக்க, அவள்கூட இருந்தவனும் நோக்க!

Surprise!
Surprise!
Loading...

காதலில் சர்ப்ரைஸுக்கு தனி மவுசு உண்டு. காதலிக்குத் தெரியாமல் காதலன் சர்ப்ரைஸ்கிஃப்ட் தருவதும், காதலனுக்குத் தெரியாமல் காதலி முத்தம் தருவதும் அட அட அட, அது ஒரு தனி உலகம். இதெல்லாம் நல்ல காதலுக்கு. ஆனா, ஜப்பான்ல ஒரு கொடுமை நடந்திருக்குப் பாருங்க. சீனாவில் இருந்து தன் ஜப்பானிய காதலியைப் பார்க்க ஆசையோடு கிளம்பியிருக்கிறான் சீன இளைஞன் ஒருவன் ரெண்டு சர்ப்ரைஸ்களோடு. முதல் சர்ப்ரைஸ், தான் ஜப்பான் வருவதை காதலிக்கு சொல்லாதது, இரண்டாவது, தன் உடல் முழுவதையும் கரடி பொம்மைக்குள் நுழைத்து அடையாளத்தை மறைத்துக்கொண்டு காதலி முன்னாள் போய் நிற்பது.

Boy surprising Girlfriend

காதலியை அடிக்கடிப் பார்க்கும் இடத்திற்கு கரடி பொம்மையாக வந்த காதலனுக்கு, காதலி ஒரு திடீர் சர்ப்ரைஸ் தருகிறாள். என்னது அது? அவள் தனது இன்னொரு காதலனுடன் கரம்கோர்த்து நெருக்கமாக இருக்கிறாள். (முதல்) காதலனுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ். நெஞ்சே நொறுங்கிப்போக, முகத்தை மறைத்திருந்த கரடி முகமூடியை விலக்கிவிட்டு தனுஷ் மாதிரி பாவமாக பார்க்க, இப்ப காதலிக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்.

Girl surprised

'என்னம்மா இப்புடி பண்ணிட்டீங்களேம்மா' என தலையை தொங்கப்போட்டுக்கொண்டு காதலன் திருமிப்போக எத்தனிக்கையில், ஓடிவந்தாள் (கள்ள)காதலனை விட்டுவிட்டு. காதலனை நெஞ்சோடு அணைத்து நெக்குருக, அத்தனையும் புகைப்பட காட்சிகளாக ட்விட்டரில் வைரலாகிவிட்டது. சரி, அந்த ரெண்டாவது காதலன் நிலைமை? அவனுக்கு ஒரு கரடி  பொம்மை கிடைக்காமயா போயிடும்!

2018 TopTamilNews. All rights reserved.