இது ஆதாரம் மாதிரி தெரியலையே! - ரஜினிக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வெளியாகும் தி.க ஊர்வல படங்கள் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Mainஇது ஆதாரம் மாதிரி தெரியலையே! - ரஜினிக்கு ஆதரவாக ஃபேஸ்புக்கில் வெளியாகும் தி.க ஊர்வல படங்கள்

தி.க ஊர்வல படங்கள்
தி.க ஊர்வல படங்கள்

சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் மற்றும் சீதை உருவங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்பட்டது என்றும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது என்றும் ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

beriyaar


ஆனால், இந்து புராணங்களில் கூறியுள்ளபடி உருவங்கள் கொண்டுவரப்பட்டது. ராமர் - சீதை உருவங்கள் நிர்வாணமாக கொண்டுவரப்படவில்லை, பேரணிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியவர்கள் வீசிய செருப்புதான் ராமர் மீது பட்டது. அதை வைத்துதான் ராமர் சிலை அடிக்கப்பட்டது என்று அந்த பேரணியில் பங்கேற்றவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ரஜினியின் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் சில பதிவுகள் வெளியாகி வருகின்றன. ரகுபதி என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சில பழைய பத்திரிகை செய்தியை பகிர்ந்துள்ளார். அதில், ஸ்கந்தன் தோற்றம், ஆண் கடவுளர்கள் புணர்ந்து பெற்ற ஐயப்பன், மகா விஷ்ணு பன்றியாகி பூமியை புணர்தல், அதில் தோன்றியது நரகாசுரன்" என்பது போன்று சில படங்கள் இருந்தன. மற்றொரு படத்தில் தமிழகத்தில் துக்ளக் தடை செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

beriyaar 01


மேலும், ராமர் சிலையை பெரியார் செருப்பால் அடிப்பது போன்று வெளியான தி.மு.க எதிர்ப்பு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.ஆனால், அது என்ன பத்திரிகை, எப்போது வெளியானது என்று குறிப்பிடவில்லை. மேலும், ராமர், சீதை உருவம் நிர்வாணமாக கொண்டு வரப்பட்டது போன்றோ, அதற்கு செருப்பு மாலை அணிவித்தது போன்றோ அதில் இல்லை. 
ரகுபதி தன்னுடைய நிலைத் தகவலில், "ரஜினி பொய்யான தகவலைத் தந்துவிட்டார். அதனால் மன்னிப்பு கேட்கவேண்டுமெனக்கூவியவர்கள்...
இப்பொழுது ஆதாரங்கள் தேடிப்பிடித்து பகிர்ந்துள்ளார்கள். இப்பொழுது மன்னிப்பு கோரிய அத்தனைப்பயலுகளும், திராவிடர் கழகமும் இந்த அவகரமான செயல்களுக்கு மன்னிப்பு கேட்குமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஒருவேளை சேம் சைட் கோல் அடிக்கிறாரோ என்று இந்த பதிவு எண்ண வைக்கிறது..

 

2018 TopTamilNews. All rights reserved.