• December
    16
    Monday

Main Area

Main



'ஸ்பைடர்மேன்' ஆக மாறி தீ விபத்தில் உயிர் தப்பிய இளைஞர்!

தீ விபத்து
தீ விபத்து

அமெரிக்கா: தீ விபத்திலிருந்து உயிர் தப்ப, 19மாடி கட்டடத்திலிருந்து ஒருவர் ஸ்பைடர்மேன் போல் கீழே இறங்கிய சம்பவம் ஒன்று அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 

fire

அமெரிக்காவின் ஃபிலாடெல்பியாவில் உள்ள 19 மாடி கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீ வேகமாகப் பரவியதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

fire

அப்போது 19வது மாடியிலிருந்து உயிர் தப்பும் நோக்கத்தில் ஜன்னல் வழியாக வந்த நபர் ஒருவர், ஸ்பைடர்மேன் போல, ஒவ்வொரு தளத்திலிருந்தும் கீழே குதித்தார். இதைக்கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினர். இருப்பினும் அந்த நபர் கொஞ்சமும் பயமின்றி உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் காயமின்றி உயிர் தப்பியது  குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.