• November
    21
    Thursday

Main Area

Mainகுதிகால் வலியை துரத்தியடிக்கும் நிரந்தர வீட்டு வைத்தியம் 

குதிகால் வலி
குதிகால் வலி

நாள் முழுவதும் ஓடியாடி வேலைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் இல்லாத குதிகால் வலி, வேலை முடித்து கொஞ்ச நேரம் உட்காரலாம் என்றால் உட்காரவும் முடியாமல், எழுந்திருக்கவும் விடாமல், ரணப்படுத்தும் குதிகால் வலி. காலை அசைக்கவே முடியாத அளவிற்கு உயிரே போகும் படியாக வலிக்கும் வலியை வார்த்தைகளில் இறக்கி வைக்க முடியாது. 

நமது அவஸ்தை தெரியாமல் அப்போது தான் நம் வீட்டு வாண்டுகள் இன்னும் ரகளையை ஆரம்பிப்பார்கள்.  மாமியார் அவசர வேலையாக அவ்வளவு நேரம் சும்மாயிருந்து விட்டு, நாம் வலியால் துடிக்கும் சமயம் தெரியாமல் சந்தேகம் கேட்பார். கட்டிக்கிட்டு வந்தவர், அவசரமேயில்லாத ஏதோவொரு பொருளை வெச்ச இடம் தெரியாமல், பேந்த பேந்த முழிச்சுக்கிட்டிருப்பார்.

leg pain

எவ்வளவு நாட்கள் தான் இந்த குதிகால் வலியோடு போராடிக் கொண்டிருக்கப் போகிறீர்கள். இந்த குதிகால் வலிக்கு எல்லாம் ஆங்கில மருந்துகள் செயல்படாது. இப்போது தான் உங்களுக்கு  புதிதாக குதிகால் வலிக்க ஆரம்பித்தால்.. அதற்கான காரணத்தை ஆராய்ந்து பாருங்கள். புதிய செருப்பாக இருக்கலாம். சிலருக்கு ஹை ஹீல்ஸ் செருப்புகள் ஒற்றுக்கொள்ளாது. அப்படியெல்லாம் இல்லை... ரொம்ப நாட்களாகவே வலிக்கத் தான் செய்கிறது என்பவர்கள் மேற்கொண்டு படியுங்கள்.

குதிகால் வலி என்பது, ஆயுளுக்குள் போராடிக் கொண்டிருக்கும் விஷயம் எல்லாம் கிடையாது. பெரும்பாலும் 30-லிருந்து 40 வயதிற்குள்ளாக இந்த குதிகால் வலி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு இது அதிகமாக வருகின்றது. நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும், ஒரே இடத்தில் நாற்காலியிலேயே அதிக நேரம் அமர்ந்திருப்போருக்கும் இது அதிகமாக வருகின்றது. குதிகால் வலிக்கு காரணங்களாக பலவற்றைப் பட்டியல் போட்டாலும், வாதநீர் குதிகால்களில் வந்து சேர்ந்துக் கொள்வதால் தான் குதிகால்களில் வலி ஏற்படுகிறது.

heel pain

மருத்துவரிடம் சென்று நீண்ட மாத்திரை பட்டியலில் உள்ள அனைத்து மருந்துகளையும் சாப்பிட்டு வைத்தாலும், அதெல்லாமே அப்போதைக்கு உடனடியாக வலியைக்  குறைக்குமே தவிர முழுமையான நிவாரணமாக இருக்காது. நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களுக்காக... வீட்டிலேயே சில நிமிடங்களில் நிரந்தர தீர்வு காணமுடியும். எளிமையான வைத்திய முறை இதோ………

தேவையான பொருட்கள்

எருக்கன் இலை- 5
கடுகு அல்லது ஆமணக்கு எண்ணெய்- 25மிலி
முழு செங்கல்- 1 
கல் உப்பு - சிறிதளவு

செய்முறை

yerukan plant

எருக்கஞ்செடி பொதுவாக வேலி ஓரங்களிலும், பூங்காக்களிலும் காணப்படும். எருகம் செடியைப் பார்த்திருக்காதவர்கள், விநாயகர் சதுர்த்தி நாட்களில், விநாயகருக்கு மாலை வாங்கியிருப்பதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த மாலை தான் எருக்கம்பூக்களினால் தொடுக்கப்பட்ட மாலை. அதன் இலைகள் தான் எருக்கம் இலை. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருவதால், எல்லா இடங்களிலும் எருக்கம் இலைகள் கிடைக்கும். 

எருக்கன் இலையை எடுத்து எண்ணெய் தடவி ஒன்றின் மேல் ஒன்றாக ஐந்து இலையிலும் எண்ணெய் தடவி அடுக்க வேண்டும். பின் சூடான செங்கல்லை தரையில் வைத்து எந்தப் பக்கம் கல் சூடாக உள்ளதோ அந்தப் பக்கத்தில் அடுக்கி வைத்த  5 இலையை  வைக்கவேண்டும். எந்தக் கால் வலிக்கிறதோ அந்தக் காலை இலையின் மேல் அழுத்தி வைக்க வேண்டும். இலை சூடேறி குதிகாலிலும் சூடு வரும் வரை அழுத்தி வைக்கவேண்டும். சூடு ஆறினால் மீண்டும் கல்லை சூடு பண்ணி மீண்டும் இதே போல் வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் குதிகால் வலிகள் எல்லாம் பறந்தோடிப் போய்விடும். அதன் பிறகு அதிக வாயு உள்ள காய்கறிகளைச் சாப்பிடுவதைத்  தவிர்த்து விடுங்கள்.

bricks

இதன் பிறகு 1டீஸ்பூன் கல் உப்பை துணியில் மூட்டை மாதிரி கட்டி வைத்துக் கொண்டு சின்ன கரண்டியில் எண்ணெயை ஊற்றி சூடு பண்ண வேண்டும். உப்பு மூட்டையை எண்ணெயில் நனைத்து குதிகால் வலி உள்ள இடத்தில் தாங்கும் சூட்டில், ஒத்தடம் கொடுக்க வேண்டும். வாரம் மூன்று முறைகள் செய்து வர குதிகால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

2018 TopTamilNews. All rights reserved.