என்ஜின் கோளாறால் பயணிகள் ரெயில் பாதியில் நிறுத்தம்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Main



என்ஜின் கோளாறால் பயணிகள் ரெயில் பாதியில் நிறுத்தம்!

 ரெயில்
ரெயில்

இன்று காலை பயணிகள் இரயில் ஒன்று கரூரில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்றது. சேலம் நோக்கி பயணிகள் இரயில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருக்கும் போது நடுவழியில் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த இரயில் நாமக்கல் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.

train

ராசிபுரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில் புறப்படாமல் நின்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து ரெயில் என்ஜினை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும், பணிக்குச் செல்வோர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.