kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


நான் யார்னு காட்டுறேன் - இம்ரான்கான் சவால்

இம்ரான்
இம்ரான்
Loading...

கடுமையான நிதிசிக்கலில் மாட்டி இருக்கும் பாகிஸ்தான், தன் உறவினர்களான சவுதி, சீனாவுக்கு 'மொய் விருந்து' நடத்தி கஜானாவை தேற்றி வருகிறார். மொய் விருந்துன்னா தெரியும்ல, சின்ன கவுண்டர் படத்துல வாங்குன கடனுக்காக விருந்து நடத்தி அதுல வர்ற மொய் பணத்தை வில்லனுக்கு செட்டில் பண்ணுவாரே சுகன்யா, அதேதான். மானம் மரியாதை பார்த்தா, சோத்துக்கு சிங்கி அடிக்கணும். இருக்குற காசை எல்லாம் தீவிரவாதிங்களுக்கு பிரியாணி போட்டே அழிச்சாச்சு, இம்ரானுக்கும் வேற வழி இல்ல.

imrfan

பணம் திரட்டுவதற்காக பல்வேறு உத்திகளை யோசித்துவரும் இம்ரான், இதுகுறித்து சவால் ஒன்றை வெளியிட்டுள்ளார். "நாட்டை வழிநடத்த எப்படி  பணம் திரட்டுவது என்பதை காட்டுவேன்" என நம்பிக்கையோடு கூறியிருக்கும் இம்ரானின் ஆக்சன் சீக்வென்ஸ்க்கு அடுத்து வரும் காமெடி டயலாக்கையும் சேர்த்து படிக்கவேண்டும். "நாட்டை வழி நடத்துவதற்கான பணத்தை நாட்டிடம் இருந்தே வசூலிப்பேன்" என்று சிரிக்காமல் சொல்லி இருக்கிறார்.

imran

ஒரு படத்தில் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும் தன் காதலியிடம் வடிவேலு வழிந்துகொண்டிருக்க, அந்தப்பெண் சற்றே துணியை விலக்க, தன் பாட்டியின் நகையில் 5 பவுனு உனக்குத்தான் என்பார் வடிவேலு. அதனை கேட்டு கண்கள் விரிய ஆசைப்படும் காதலி, துணியை இன்னும் சற்றே விலக்குவாள். துணிவிலகலின் அளவுக்கேற்ப வடிவேலு உத்தரவாதம் தரும் பவுனின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகும். அதுபோல, இந்தியாவுக்கு எதிரான தங்களின் மறைமுகப் போருக்கு பாகிஸ்தான் எந்தளவு ஒத்துழைப்பு தருகிறதோ, அதற்கேற்றாற்போல் சீனாவும் தன் கஜானாவை அகல திறக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

2018 TopTamilNews. All rights reserved.