• August
    22
    Thursday

Main Area

பாமக
பொன்பரப்பி பிரச்னை; திமுக பிரமுகர் உயிருக்கு ஆபத்து?!..

பொன்பரப்பி பிரச்னையில் விசிக ஆதரவாக செயல்படும் திமுக மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உயிருக்கு ஆபத்து என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவசங்கர்

மக்களவை தேர்தல் கடந்த 18 ஆம்  தேதி நடந்து முடிந்தது. அந்த வேளையில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை உடைத்து சிலர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பாமக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நிகழ்த்தப்பட்டது என செய்திகள் வெளியாகின. 

sivasankar

இந்த பிரச்னை தொடர்பாக விசிக சார்பில் வரும் 24-ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் விசிக ஆதரவாக செயல்படும் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல் வெளியாகியுள்ளது.

பொன்பரப்பியில் பாமக மற்றும் இந்து முன்னணியால் நடத்தப்பட்ட வன்முறை சம்பவத்திற்கு பின்பு விசிகவுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக செயல்பட்டுவருவதால் எஸ்.எஸ். சிவசங்கர்-க்கு (திமுக மாவட்ட செயலாளர்) பாமக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாகவும், அவரைப்பற்றிய அவதூறு பரப்புதாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

vck

பொன்பரப்பி, பொன்னமராவதி என தொடர்ந்து சாதிய பிரச்னைகள் தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. பாமக ஒரு சாதிக்கட்சி என்றும், அதேபோல் செயல்படும் சாதிக்கட்சிகளை தடைசெய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அன்புமணி தொகுதியில் மறு வாக்குப்பதிவு... அதிர வைக்கும் தேர்தல் ஆணையம்.. கலக்கத்தில் பாமக..!

Arunpandiyan Mon, 04/22/2019 - 12:36
சிவசங்கர் பொன்பரப்பி சாதிவெறி பாமக விசிக திமுக சிவசங்கர் தமிழகம்

English Title

Ponparappi issue; life threat to DMk person?!..

News Order

0

Ticker

0 தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்க சித்திரைத் திருநாள் வகை செய்யட்டும்; பாமக நிறுவனர் ராமதாஸ்

சித்திரை திருநாளை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழ்க் கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமையும் சித்திரை திருநாளை உலகெங்கும் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

dSfd

ஒரு காலத்தில் சித்திரை மாதம் செல்வம் பொங்கும் மாதமாக திகழ்ந்தது. காரணம் சித்திரையில் தான் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும். அப்போது மக்கள் வாழ்வில் வளம் கொழிக்கும்  என்பதால் சித்திரை மாதம் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவர். சித்திரை மாதத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக தமிழர்கள் கொண்டாடி மகிழும் போதிலும், சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஆனால், அவையெல்லாம் இப்போது வலி கொடுக்கும் கனவாகிவிட்டன.

dvv

இந்தியா விடுதலை அடைந்த நாள் முதல் 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டவர்கள் அனைத்து வகை அதிகாரங்களையும் தாங்களே சுவைக்க வேண்டும் என்பதற்காக கல்வி உள்ளிட்ட அனைத்து  உரிமைகளையும் பறித்துக் கொண்டனர். மாநில சுயாட்சி என்று முழங்கி, தமிழகத்தில் ஆட்சி செய்தவர்களும் உரிமைகளை தாரை வார்த்து துரோகம் செய்தனர். அவ்வாறு தாரை வார்க்கப்பட்ட உரிமைகளில் மிகவும் முக்கியமானது காவிரி ஆற்று நீர் உரிமை. அந்த துரோகம் தான் செழிப்பாக அமைய வேண்டிய சித்திரைத்  திருநாள், இப்போது வறட்சியோடும், வறுமையோடும் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றாகி விட்டது.

zsfz

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தாரை வார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம்  நிறைவேறவும், வளமான, மகிழ்ச்சியான தமிழகம் என்ற கனவு நனவாகவும் அற்புதமான வாய்ப்பு இப்போது  கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதற்கு சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும்; உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

 

Arunpandiyan Sat, 04/13/2019 - 19:05
ராமதாஸ் பாமக சித்திரை திருநாள் ராமதாஸ் தேர்தல் களம்

English Title

Ramadoss wishes to tamil people for chithrai day

News Order

0

Ticker

0 ரஜினி மக்கள் மன்றம், அதிமுக, அமமுக வரிசையில் பாமகவினர் பலர் திமுகவில் இணைந்தனர்

ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு, சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரில் தனது பிரச்சாரத்தை துவங்கி பல்வேறு இடங்களில் தீவிரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

admk

இந்தமுறை திமுக தரப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது, அமமுக-வில் இருந்து சிலர் திமுகவில் இணைந்தனர், அதிமுக ராஜ கண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

அதிமுக

அதேபோல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் பலர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 100-க்கும் அதிகமான பாமகவினர் திமுகவில் இணைந்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஓமலூர் தொகுதி முன்னாள் பாமக எம்.எல்.ஏ தமிழரசு, சேலம் மாவட்ட பாமக செயலாளர் ஜெயவேல் உள்பட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைந்தனர். இப்படி பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் திமுக பக்கம் சாய்வது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Arunpandiyan Fri, 03/22/2019 - 11:45
பாமக தமிழரசு முக ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2019 தமிழரசு - முக ஸ்டாலின் தேர்தல் களம்

English Title

More than hundreds of pmk supporters joined in dmk

News Order

0

Ticker

0 
2018 TopTamilNews. All rights reserved.