darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



எனது அடுத்தப் படத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன்- பா. ரஞ்சித்!

பா. ரஞ்சித்
பா. ரஞ்சித்

எனது அடுத்த படங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களுடன் வெளியிட முயற்சி செய்வேன் என இயக்குனர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைந்து அவருடைய தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை Navigator, Better World Sheltor For Women With Disabilities மற்றும்  Friends Of December 3 Movement ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித், இயக்குநர் அதியன் ஆதிரை, நடிகர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பா. ரஞ்சித்

அந்த நிகழ்ச்சியில் பேசிய பா. ரஞ்சித், "மாற்றுத் திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கூட முழுமையானதாக இல்லை என்பதை அவர்களிடம் பேசியதிலிருந்து புரிந்து கொண்டேன். எனது அடுத்த திரைப்படங்களில் காதுகேளாத, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பம்ச தொழிற்நுட்பங்களை வைத்து வெளியிட முயற்சி செய்வேன்" எனக் கூறினார். 

2018 TopTamilNews. All rights reserved.