darbar
  • January
    20
    Monday

Main Area

Main



அழகிப்போட்டியில் அசத்தும் நம்நாட்டு பெண்கள்! மிஸ் யுனிவர்ஸ் 2019 அப்டேட் 

வர்த்திக்கா சிங்
வர்த்திக்கா சிங்

நம்ம ஊரு பொண்ணு  அனுகீர்த்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டத்தை வென்று நம் நாட்டுக்கு பெருமை சேர்த்தது அனைவருக்கும் தெரியும்! அந்த பட்டியலில் வர்த்திக்கா சிங் வருகிறார்.

miss universe

உத்தரபிரதேசத்தை சேர்ந்த வர்த்திகா சிங்,இந்தியன் மாடல் ஆவார், இவர் தற்போது இந்தியாவை ரெப்ரெஸ்ன்ட் செய்து மிஸ் யூனிவெர்ஸ் 2019-ல் பங்கேற்றுள்ளார். இந்த போட்டி நாளை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டி  68வது எடிஷன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டி டிசம்பர் 8-ம் தேதி யுனைடட் ஸ்டேட்ஸில் ஜியார்ஜியாவில் உள்ள டைலர் பெர்ரி என்னும் ஸ்டுடியோவில் நடைபெரும் என்று தெரிகிறது. இதன் செமி-பைனலிஸ்ட்ஸ் இன்று தேர்வுசெய்யப்பட்டு நாளை இறுதிப்போட்டி நடைபெறும். இதன் லைவ் எப்படி பார்ப்பது என்று அறிந்துகொள்ள அடுத்த பாராவுக்கு போங்க...

vartika

மொத்தம் இப்போட்டியில் 90 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கு பெறுகின்றனர். அவர்களுள் 6 போட்டியாளர்கள் தங்கள் நெஷனல் டைட்டிலுக்காக போட்டியிடுகின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த வர்த்திகா சிங்க்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 20 போட்டியாளர்களுக்கு, கிளோஸ்ட் டோர்(closed door) இன்டெர்வியூ நடத்தியும், மேலும் முன்போட்டிகள் சிலவற்றை நடத்தியும் அரை இறுதிக்காக தேர்வு செய்யப்படுவர். இறுதியாக வெற்றியாளருக்கு பிலிப்பைன்ஸின் கிஸ்திரியோனா கிரே முடிசூட்டுவர். 

vartika

மிஸ் யூனிவெர்ஸ் 2019-ன் லைவ்-ஐ சப்ஸ்க்ரைப் (subscription) செய்யப்பட்ட டிவியில் பார்க்கலாம், மேலும் இணைதளங்களிலும் இதன் அப்டேட்டுகளை காணலாம்!

2018 TopTamilNews. All rights reserved.