• February
    20
    Thursday

Main Area

Main



அகரம் foundationஆல் டாக்டர் ஆன ஆதரவற்ற பெண் - சிவகுமார் வழியில் சேவையை தொடரும் சூர்யா 

surya agaram foundation
surya agaram foundation

நடிகர்  சிவகுமார் சினிமாவில் நடிகரான நாள்முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் sslc யில் முதலாவதாக வரும் மாணவனுக்கு 5000 ரூபாய் பரிசுத்தொகையினை அளித்து வருகிறார் ,கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக இந்த சேவையை அவர் செய்து வருகிறார் ,அவர் வழியில் வந்த அவரது வாரிசான நடிகர் சூர்யா ,அகரம் foundation என்ற ஒரு அமைப்பை உருவாக்கி ,பல ஏழை மாணவர்களுக்கு படிக்க  உதவி செய்து வருகிறார் ,இந்த அமைப்பு மூலம் பயன்பெற்று என்ஜினீயர் ,டாக்டர் ,என பல பெரிய பதவியிலிருக்கும் ஏழை மாணவர்கள் ஏராளம் .

 


இப்படி கிருஷ்ணவேணி என்ற ஒரு ஏழை மாணவி தனது 12 வது வயதிலேயே  தன் பெற்றோரை இழந்து விட்டார் ,ஆனால் தன்னை ஒரு டாக்டராக்கி பார்க்கவேண்டுமென்ற தனது பெற்றோரின் கனவை நிறைவேற்ற கடுமையாக படித்தார் .மெடிக்கல் சீட்டு வாங்க எக்ஸாம் எழுதினார் ,ஆனால் அரை மார்க்கில் அவருக்கு சீட் கிடைக்காமல் போனது ,உடனே மனம் தளராமல் நடிகர் சூர்யாவின் அகரம் foundation க்கு கடிதம் எழுதினார் ,அவர்கள் உதவி செய்து டாக்டருக்கு படித்த கிருஷ்ணவேணி இன்று அவரும் ஒரு டாக்டரானார் .

sivakumar


இப்போது கிருஷ்ணவேணி இந்தியன் ராணுவத்தில் டாக்டராக பணி புரிகிறார் ,இப்படி பல ஏழை ,அனாதை குழந்தைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுக்கும் அகரம் foundation சேவை மேன் மேலும் தொடரட்டும்.

 

2018 TopTamilNews. All rights reserved.