• February
    21
    Friday

Main Area

Main



விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்..14 பேருக்கு மறுவாழ்வு !

suresh
suresh

உடல் உறுப்புகள் தானம் செய்வது என்பது மிகவும் அரிதான காரியம். இறந்த பிறகு, மண்ணில் போகப்போகும் உடல் உறுப்புகளைக் கொடுக்க பல மக்கள் முன்வர மாட்டார்கள். அந்த உடல் உறுப்பினால் எத்தனை உயிர்கள் மறுவாழ்வு பெரும் என்பதை அறியாததாலேயே உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வராமல் இருக்கின்றனர். இந்நிலையில், மூளைச்சாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் உறுப்புகள் 14 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. 

ttn

சேலம் மாவட்டத்தில் உள்ள ராஜராம் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 50.  மருத்துவ காப்பீட்டு முகவராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதால்  பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் மூளைச்சாவு அடைந்தார்.

ttn

விபத்தில் உயிரிழந்த தன் கணவரின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு உதவட்டும் என்று எண்ணிய அவரது மனைவி சுரேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார். அதனையடுத்து, உடல் உறுப்பு தானம்  ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு அதே மருத்துவமனையில் நுரையீரல், இதயம், கண்கள், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன. சுரேஷ் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகம் தவிர மற்ற 14 உறுப்புகளும் தானமாக வழங்கப்பட்டு 14 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.