• February
    19
    Wednesday

Main Area

Main



ஆப்பு வைத்த ஓ.பி.எஸ்.. அலறித்துடித்த எடப்பாடி... அட, இப்படியொரு உள்குத்தா..?

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தால்  முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகமாகி விட்டது.

ஆளும் கட்சியான அதிமுகவில் ஓ.பி.எஸ் -ஈ.பி.எஸ் என இரு அதிகார மையங்களுக்கு இடையே முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை இருந்த எந்த முதல்வரும் விஜயதசமிக்கும், தசரா பண்டிகைக்கும், ஆளுநருக்கு வாழ்த்து சொன்னதே  இல்லை.

ஆனால், இந்த விஜயதசமிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வாழ்த்து சொல்லி காலையிலேயே பூங்கொத்தை அனுப்பி வைத்தார். பதிலுக்கு அவரும் பூங்கொத்துடன் நன்றி மற்றும் வாழ்த்து கடிதத்தை அனுப்பி வைத்தார். 

துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டில் இருந்தே இந்த செய்தி, 'மீடியா'க்களுக்கு போய் விட்டது. இதனால், முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி அதிகமாகி விட்டது. உடனே முதல்வர் எடப்பாடியும் மாலை ஆளுநர் மட்டுமின்றி அவரது குடும்பத்துக்கும் வாழ்த்து சொல்லி பூங்கொத்து அனுப்பி இருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.