kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


இந்தியாவில் ஓப்போ எஃப்11 ப்ரோ மற்றும் ஓப்போ எஃப்11 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

OPPO
OPPO
Loading...

டெல்லி: இந்தியாவில் ஓப்போ எஃப்11 ப்ரோ மற்றும் ஓப்போ எஃப்11 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஓப்போ எஃப்11 ப்ரோ மற்றும் ஓப்போ எஃப்11 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஓப்போ எஃப்11 ப்ரோ விலை ரூ.24,990 என்றும், ஓப்போ எஃப்11 விலை ரூ.19,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தன்டர் பிளாக் மற்றும் அரோரா கிரீன் ஆகிய நிறங்களில் ஓப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஃபேவரட் பர்ப்பிள் மற்றும் மார்பில் கிரீன ஆகிய நிறங்களில் ஓப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அமேசான், ப்ளிப்கார்ட், பேடிஎம் மால், ஸ்னாப்டீல், ஓப்போ ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஷோரூம்களில் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஓப்போ எஃப்11 ப்ரோ விற்பனை செய்யப்படுகிறது.

ஓப்போ எஃப்11 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12என்.எம். பிராசஸர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி பிரைமரி கேமரா, 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி பாப்-அப் செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஆகியவை இடம்பெற்றுள்ளது.

அதேபோல ஓப்போ எஃப்11 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 இயங்குதளம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 48 எம்.பி பிரைமரி கேமரா, 5 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எம்.பி பாப்-அப் செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், எஃப்.எம் ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 4020 எம்.ஏ.ஹெச் பேட்டரி, VOOC ஃபிளாஷ் சார்ஜ் 3.0 ஆகியவை இடம்பெற்றுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.