• April
    06
    Monday

Main Area

Main



குரூப்-1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம் !

Online application
Online application

கடந்த செப்டெம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, 2ஏ ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது. அதாவது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மரபு, பண்பாடு, சமூக - அறிவியல் இயக்கங்கள், தமிழ்நாட்டின் வரலாறு, தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம் ஆகிய பாடங்களைச் சேர்த்துள்ளதாகத் தெரிவித்தது. தமிழ் தெரியாதவர்கள் அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதே போல, குரூப் 1 தேர்வுக்கும் அதே பாடத்திட்டம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. 

ttn

இந்த ஆண்டிற்கான குரூப்-1 தேர்வுக்கான விவரங்கள் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 தேர்வின் முதல்நிலை எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று தொடக்கி வரும் பிப்.19 வரை நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் விண்ணப்பிக்கக் கால அவகாசம் உள்ளது. 

ttn

குருப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் இது குறித்த அனைத்து தகவல்களும் டி.என்.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.