• April
    06
    Monday

Main Area

Main



சீமான் வீடியோ: நீயெல்லாம் ஒரு பெண்ணா என கொந்தளித்த நாம் தமிழர் காளியம்மாள்!

vijayalakshmi-and-kaliammal
vijayalakshmi-and-kaliammal

சீமான் பற்றிய வீடியோ மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வரும் நடிகை விஜயலட்சுமிக்கு எதிராக நாம் தமிழர் ஸ்டார் பேச்சாளர் காளியம்மாள் கொந்தளித்துள்ளார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய காளியம்மாள், மு.க.ஸ்டாலின் தொடங்கி பலரையும் ஒரு பிடி பிடித்தார். கடைசியில் நடிகை விஜயலட்சுமி விவகாரத்துக்கு வந்தார். நடந்த தவறு பற்றி எதையும் குறிப்பிடாமல், வெளியிட்ட விஜயலட்சுமி மீது பாய்ந்தார்.

seeman-vijayalakshmi

அப்போது அவர், "நீயெல்லாம் ஒரு பெண்ணென்று சொல்லிட்டு திரியாதே.. பெண்களுக்கு தேர்தலில் சம வாய்ப்பு தந்திருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் தான். அப்படிப்பட்ட தலைவரைப் பெண்களை வலிமைப்படுத்துவதாக ஒப்பிட்டு அந்த அம்மா சொல்லிட்டு கிடக்கு. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம்தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு.. இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினே...


அண்ணன்-தங்கையா பேசு, தகப்பன்-மகளா பேசு, வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது? நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் கருத்தியலைக் களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன்" என்றார். காளியம்மாளின் பேச்சை நாம் தமிழர் கட்சியினர் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.