• April
    05
    Sunday

Main Area

Main



வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தாண்டியுள்ளது

whatsapp
whatsapp

டெல்லி: வாட்ஸ்அப் மொபைல் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை தாண்டியுள்ளது.

உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை கடந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதை தொடர்ந்து 2017 ஜுலை மாதத்தில் பயனர்கள் எண்ணிக்கை 100 கோடியை கடந்தது.

ttn

அதுவே 2018-ம் ஆண்டில் இது 150 கோடியாக அதிகரித்தது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய பயனர்களின் எண்ணிக்கை குறித்து அறிவித்துள்ளது. அதன்படி உலகளவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை கடந்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.