'என் குழந்தையைப் போல வேறு யாரும் கஷ்டப் படக்கூடாது' குழந்தையின் உடலை ஆராய்ச்சிக்காக ஒப்படைத்த பெற்றோர் ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Main'என் குழந்தையைப் போல வேறு யாரும் கஷ்டப் படக்கூடாது' குழந்தையின் உடலை ஆராய்ச்சிக்காக ஒப்படைத்த பெற்றோர் !

baby
baby

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தொழிலதிபராக இருந்து வரும் சாத்னம் சிங் சாப்ராவிற்கு 2 வயது குழந்தை உள்ளது. குழந்தையின் பெயர்  ஆசீஸ் கவுர் சாப்ரா.  ஆசீஸ் பிறந்ததிலிருந்து அரிய வகை கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  சாத்னம் சிங் எத்தனையோ மருத்துவர்களிடம் பரிசோதனை செய்தும் அதனைக் குணப்படுத்த முடியவில்லை. அந்த நோயால் அவதிப்பட்டு வந்த குழந்தையின் ஒவ்வொரு உறுப்பாகச் செயலிழந்து, உயிரிழந்துள்ளது. 

ttn

குழந்தை உயிரிழந்ததால் மனமுடைந்த பெற்றோர் இத்தகைய நோயால் மீண்டும் ஒரு குழந்தை உயிரிழக்கக் கூடாது என்று எண்ணி, குழந்தையின் உடலை ஆராய்ச்சி பயன்பாட்டிற்காக மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய குழந்தையின் தந்தை சாத்னம் சிங் சாப்ரா, " எங்கள் மகளின் உடலை ஆராய்ச்சி பயன்பாட்டிற்காகக் கொடுத்துள்ளோம். இத்தகைய அரிய வகை நோயால்,வேறு எந்த குழந்தையும் இனிமேல் இறக்கக்கூடாது. அப்படி ஏதேனும் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கு என் குழந்தையின் உடல் மூலம் தீர்வு கிடைக்கும். எங்கள் குழந்தையின் கண்களையும் தானமாகக் கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். 


 

2018 TopTamilNews. All rights reserved.