kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


வன்முறைக்கு அகிம்சையே தீர்வாக இருக்க முடியும்...ஏழு பேர் விடுதலை குறித்து பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி.
பிரியங்கா காந்தி.
Loading...

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக சிறையிலுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து,பல்வேறு கட்சிகளும், இயக்கங்களும் பல காலமாகவே போராடி வருகிறார்கள்.இந்த நிலையில் வன்முறைக்கு அகிம்சையே தீர்வு என்று’ தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் பிரியங்கா காந்தி.

priyanka gandhi


“தனிப்பட்ட முறையில், எனக்கு வன்முறையின் மீது எப்போதும் நம்பிக்கை இல்லை.வன்முறைக்குத் கூடுதல் வன்முறை என்பது ஒருபோதும் தீர்வாக அமையாது” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா காந்தியிடம்  “ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை,பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கடுமையாக எதிர்த்து வருகிறதே?” என்று  கேட்டதற்கு
“எது எப்படி இருப்பினும், 7 பேர் விடுதலை என்பது, அரசியல் மட்டத்தைப் பொறுத்தவரை,முற்றிலும் மாறுபட்ட விஷயமாகும்” என்று சொன்ன பிரியங்கா காந்தி,தொடர்ந்து…
”ராஜீவ் காந்தி முன்னாள் பிரதமர்.அவர் கொல்லப்பட்ட நிகழ்வு ஒரு அரசியல் படுகொலை! வன்முறைக்கு அகிம்சையே தீர்வு என ராஜீவ் காந்தியின் மகளாக, எனது தனிப்பட்ட நிலைப்பாட்டையோ ,மனிதாபிமான அடிப்படையில் நினைப்பதையோ, ஒரு தேசமும் நினைக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.