• November
    22
    Friday

Main Area

Main



அவர் ஒரு குழந்தை மாதிரி.. அவர் வருவார் என்று எனக்கு தெரியும்: பிரபல நடிகை ஓபன் டாக்!

கியாரா அத்வானி
கியாரா அத்வானி

மும்பை: ராகவா லாரன்ஸ் ஒரு குழந்தைமாதிரி என்று நடிகை கியாரா அத்வானி புகழ்ந்து தள்ளியுள்ளார். 

நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி படத்தின் இரண்டாம் பாகமான காஞ்சனா திரைப்படம் கடந்த 2011 ஆம்  ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது வரை காஞ்சனா 2, 3 பாகங்கள் வெளியாகியுள்ளது.  காஞ்சனாவின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் எடுக்க முடிவெடுத்தார் ராகவா லாரன்ஸ். அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கவிருந்த இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்படத்தில் நடிக்க நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியிருந்தார். 

raghaava


இதையடுத்து காஞ்சனா ஹிந்தி ரீமேக்கின் பஸ்ட்  லுக் போஸ்டர் தன்னுடைய அனுமதி இல்லாமல் வெளியாகியுள்ளது. பணத்தை விட சுயமரியாதை தான் முக்கியம். அதனால் இப்படத்திலிருந்து விலகுகிறேன் என்று லாரன்ஸ் அறிவித்தார். லாரன்ஸின் இந்த முடிவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்டரஹே தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ராகவா லாரன்ஸிடம் நடத்தப் பேச்சுவார்த்தையினால் அவர் மீண்டும் இப்படத்தை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

raghava


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை நடிகை கியாரா அத்வானி, ‘ ராகவா லாரன்ஸ் திரும்ப வருவார் என்று எதிர்பார்த்தேன். அதே போல் வந்து விட்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இப்படத்தைச் சரிவர இயக்கமுடியாது. அவர் ஏற்கனவே இப்படத்தை இயக்கியிருப்பதால் அவர விட வேற யாருக்கும் இது புரியாது. அவர் ஒரு குழந்தை மாதிரி. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் மும்பையில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.