darbar
  • January
    20
    Monday

Main Area

Main



நித்யானந்தா விவகாரம்! கெடு விதித்த நீதிமன்றம்..

Nithyananda
Nithyananda

நித்யானந்தா எங்கிருக்கிறார் என 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக போலீசாருக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கெடு விதித்துத்துள்ளது. 

நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும் பாய்ந்துள்ளது. அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நித்தியானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால் காவல்துறையினருக்கு டிமிக்கிக் கொடுத்துவரும் நித்தியானந்தா அவ்வப்போது யூடியூபில் தலைக்காட்டி பிரசங்கம் என்ற பெயரில் ஏதாவது உளறிக்கொண்டிருக்கிறார். 

நித்யானந்தா

தமிழ்நாட்டைச் சேர்ந்த நித்தியானந்தா, பெங்களூருவை அடுத்த பிடரியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். குஜராத் காவல்துறையினர் நித்தியானந்தாவிற்கு புளூகார்னர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை கண்டுபிடித்து வரும் 12 ஆம் தேதிக்குள் அஜர்படுத்த கர்நாடக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் நித்யானந்தா எங்கே இருக்கிறார் என வரும் 18ம் தேதிக்குள் தெரிவிக்க  வேண்டும் என்றும் நித்தியானந்தாவிற்கு எதிரான ஆதாரங்களை சமர்பிக்கவும் கர்நாடகா ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.