• April
    06
    Monday

Main Area

Main



டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்தினால் பெண்களுக்கு புதிய சக்தி கிடைக்கும் - நித்தியானந்தா அட்வைஸ் 

nithyananda
nithyananda

டிவி சீரியல் பார்ப்பதை நிறுத்தினால் உயிர் மூல லிங்கம் என்ற சக்தி பெண்களுக்கு கிடைக்கும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

சிறுமிகள் கடத்தல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரபல சாமியார் நித்தியானந்தா. இவர் கரீபியன் தீவுகள் பகுதியில் ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி, அதை கைலாசம் என்ற தனிநாடாக அறிவிக்கப்போவதாக கதைவிட்டார். இதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதை நம்பி தனக்கு பதவி எல்லாம் வேண்டும் என்று எஸ்.வி.சேகர் உள்ளிட்டவர்கள் வீடியோ வெளியிட்டனர். ஆனால், தனித் தீவு எல்லாம் வாங்கவில்லை என்றும் அகதியாகக் கூட அவரை ஏற்க முடியாது என்றும் சில நாடுகள் தெரிவித்தன. சர்வதேச போலீசாரல் தேடப்பட்டுவரும் நித்தியானந்தா, தொடர்ந்து யூடியூபில் சத்சங்கம் நிகழ்ச்சியில் உரையாற்றிவருகிறார். 

nithyananda

யூடியூபில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், "டிவி சீரியல் பாத்துட்டு செத்துபோயிடுவீங்க, டிவி சீரியல் பாத்துட்டு இருக்கும் போதே பியூஸ் போயுடுது. தீய சக்திகள் பெண்கள் மீது நடத்தும் தாக்குதல்தான் டிவி சீரியல். நாடகங்களை பார்த்துவிட்டு அதில்வருவதுபோலவே நகை, புடவை கேட்டு பெண்கள் நச்சரிப்பதாக கணவன்கள் புலம்பி தள்ளுகின்றனர். நாடகங்களை பார்க்காமல் இருந்தால் CONCIOUS ENERGY BLUE PRINT எனப்படும் உயிர் மூல லிங்கம் என்ற சக்தி பெண்களுக்கு கிடைக்கும்” என தெரிவித்தார். 
 

2018 TopTamilNews. All rights reserved.