• August
    21
    Wednesday

Main Area

Main



இந்தியா - பிரிட்டன் உறவை மேம்படுத்திய பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மத்திய அமைச்சர்!

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Loading...

லண்டன்: இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவை மேம்படுத்த உதவிய 100 பெண்கள் பட்டியலில்,  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம்பிடித்துள்ளார்.

india - uk

பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகள் இடையே உறவை மேம்படுத்தும் விதமாக ஜூன் மாத இறுதியில் பிரிட்டன் இந்தியா வாரம் கடைபிடிக்கப்படும். இதையொட்டி இருநாடுகளின் உறவை மேம்படுத்த உதவியர்கள் கௌரவிக்கப்படுவர். 

nirmala

இந்நிலையில்  பிரிட்டன் இந்தியா ஆகிய இருநாடுகளின் உறவை மேம்படுத்த உதவிய 100 பெண்களின் பட்டியலை, அந்நாட்டு உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவித் வெளியிட்டுள்ளது. அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம் பிடித்துள்ளார்.  அதில் நிர்மலா சீதாராமன் பிரிட்டனுக்கு மிகவும் பழக்கமானவர்.அவர் லண்டனில் பொருளாதாரம் பயின்று அங்கேயே பணிபுரிந்தவர்  என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

suneeta

மேலும் பிரிட்டன் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், இந்திய வம்சாவளி எம்.பி.க்களான பிரீத்தி படேல், பரோனெஸ் சாண்டி வெர்மா, திரைப்பட இயக்குனர் குரிந்தர் சாதா, அப்போலோ மருத்துவமனை மேலாண் இயக்குனர் சுனீதா ரெட்டி ஆகியோரின் பெயர்களும்  இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.