• February
    22
    Saturday

Main Area

Main



தன்னைப் பற்றிய பிரேக்கிங் செய்தியை தானே வாசித்த செய்தி வாசிப்பாளர்! லைவ்வில் கிடைத்த மகிழ்ச்சி!! 

ஸ்ரீஜா
ஸ்ரீஜா

தன்னைப் பற்றிய பிரேக்கிங் நியூசை தானே வாசித்து இன்ப அதிர்ச்சியடைந்தார் செய்தி வாசிப்பாளர் ஒருவர். 

கேரளாவில் இயங்கி வரும் மாத்ருபூமி தொலைக்காட்சியில் தலைமை இணை ஆசிரியராக இருக்கும் ஸ்ரீஜா ஷியாம் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார்.

செய்திவாசிப்பாளர்

அப்போது நடுவே ஒரு பிரேக்கிங் நியூஸ் வந்தது. அதில் கேரள அரசின் சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது ஸ்ரீஜா ஷியாமுக்கு அறிவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகி, திரையில் ஸ்ரீஜா ஷியாமின் படம் தோன்றியது. 

 

 

இதை பார்த்த அவரால் ஒரு சில விநாடிகள் எதுவும் பேச முடியாமல் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து தனக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பதை தானே மகிழ்ச்சியுடன் அறிவித்தார் ஸ்ரீஜா. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.