• August
    21
    Wednesday

Main Area

Main



இதுக்கு தான் உன் பொண்டாட்டிய விவாகரத்து பண்ணியா? விஷ்ணு விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்
Loading...

நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில்  வேகமாகப் பரவி வருகிறது. 

vishnu

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்  நடிகர் விஷ்ணு விஷால். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துத்திருந்தாலும் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்   இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜெகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். 

vishnu

இதனிடையே இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது  தோழி ரஜினியை  திருமணம்  கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஒரு மகன் இருக்கிறான். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு விவாகரத்து கிடைத்துவிட்டதாக விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு இறுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

 

:)@Guttajwala pic.twitter.com/RvxqWoMPYB

— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 3, 2019

இந்நிலையில்  விஷ்ணு விஷால் தனது  டிவிட்டர் பக்கத்தில்,  பிரபல  பேட்மிண்டன்  வீராங்கனை  ஜூவாலா  குட்டாவுடன் நெருக்கமாக உள்ள செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

What do you mean by this Image? You gonna marry her???? @Guttajwala

— Priyanka (@priyankaspeakes) June 3, 2019

இதுனால தான் உன் பொண்டாட்டிய டிவோர்ஸ் பண்ணிட்டியா ?

— கம்முன்னாட்டி (@kamnaaty) June 3, 2019

இதை கண்ட நெட்டிசன்கள், இந்த புகைப்படத்திற்கு என்ன அர்த்தம்? நீங்கள் இவரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா? இதனால் தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

vishnu

முன்னதாக விஷ்ணு விஷால் நடிகை  அமலா பாலை திருமணம் செய்து கொள்ளப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால்  அதற்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.