• April
    05
    Sunday

Main Area

Main



சட்டவிரோதமாக என்ன இருக்க வேண்டும்?... டிவிட்டரில் கேள்வி கேட்ட ஸ்டேட் வங்கி.... கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்....

எஸ்.பி.ஐ.
எஸ்.பி.ஐ.

சமூக வலைத்தளங்கள் சிறந்த பொழுதுபோக்கு தளம் என்பதை தாண்டி பல்வேறு வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக டிவிட்டர்,  வணிகம் மற்றும் பிற அமைப்புகளுக்கு தங்களை பின்தொடர்பவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், ஈடுபடுவதற்கும் மிகவும் சாதகமான தளமாக மாறியுள்ளது. உபெர், அமேசான் ப்ரைம், டூரெக்ஸ் மற்றும் ஸ்விக்கி போன்ற சிறந்த பிராண்டுகள் தங்களது படைப்பு பிரச்சாரங்களின் மூலம் பரந்த சமூக ஊடக பார்வையாளர்களை கவருகின்றன.

எஸ்.பி.ஐ.

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் அது போன்றதொரு முயற்சியை மேற்கொண்டது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது டிவிட்டரில், சட்டவிரோதமாக என்ன இருக்க வேண்டும் ஆனால் அது இல்லை? என தன்னை பின்தொடருபவர்களிடம் கேள்வி கேட்டு இருந்தது. அதற்கு எஸ்.பி.ஐ. பாலோயர்ஸ் விதம் விதமான சுவாரஸ்யமான பதில்களை அளித்து இருந்தனர். 

எஸ்.பி.ஐ.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் கேள்விக்கு அந்த வங்கியில் நடைபெறும் சில செயல்களை கிண்டல் அடித்து நெட்டின்சன்கள் அளித்த சில ருசிகரமான பதில்கள்: 11.30 மணிக்கு மதிய உணவு. எஸ்.பி.ஐ.யில் முடிவில்லாத மதிய உணவு இடைவேளை நேரம். பணியாளர்கள் அலுவலகத்தில் தாமதமாக அமருவது. ஒரு கவுண்டருக்கு 2 வரிசைகள் என பல்வேறு ருசிகரமான பதில்களை அளித்து இருந்தனர்.

2018 TopTamilNews. All rights reserved.