• February
    29
    Saturday

Main Area

Main



உலக சுகாதார தினம்; இமயமலையில் 10,000 கிலோ குப்பைகள் அகற்றும் பணி?!..

இமயமலை
இமயமலை

உலக சுற்றுச்சூழல் தினம் வருவதையொட்டி இமயமலையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. புவி வெப்பமயமாதல் பிரச்சனை அதிகரிக்க, சுற்றுசூழலுக்கு கேடு விளைப்பதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. நம் சுற்றச்சூழலை நாம்தான் பாதுகாக்க வேண்டும்.

nepal

ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக இமயமலையில் இருக்கும் குப்பைகளை அகற்றும் பணியை நேபாளம் அரசாங்கம் செய்து வருகிறது.

himalaya

கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் 3,000 கிலோ குப்பைகளை நேபாள ராணுவம் அகற்றியிருந்தது. தற்போது 5,000 கிலோ வரையிலும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்துக்கு முன்பு 10,000 கிலோ குப்பைகளை அகற்றி, தலைநகர் காத்மண்டில் மக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்துவதுதான் நேபாள அரசின் திட்டம்.

பின்னர் அதனை மறுசுழற்சி செய்யும் முயற்சியில் அவ்வரசாங்கம் செயல்படவுள்ளது. சுற்றுலா பயணிகளால் அதிகமானதுதான் இந்த குப்பைகள், கூடாரங்கள், பிளாஸ்டிக் பைகள் முதல் பல்வேறு குப்பைகள் இமயமலையில் குவிந்து கிடக்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.