• February
    26
    Wednesday

Main Area

Main



சினிமாவில் தனக்கு ஏற்பட்ட 'கசப்பான' அனுபவங்களை உடைத்த நயன்தாரா!

நயன்தாரா
நயன்தாரா

தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவு உயர்ந்திருக்கிறார் நயன்தாரா. இந்த பெயரெடுக்க அவரின் கடின உழைப்பும், மனம் தளராமயுமே காரணம்.

சோலோ ஹீரோயினாக திரையுலகை கலக்கும் வெகு சில கதாநாயகிகளில் நயன்தாரா முக்கிய இடம் வகிக்கிறார். அதற்கு காரணம் அவர் கதையை தேர்ந்தெடுக்கும் விதமும், படம் வெளியாகும் வரை அந்த குழுவுக்கு உறுதுணையாய் இருப்பதும்தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

nayan

மாயா, அறம், கோலமாவு கோகிலா என நயன்தாராவின் ஹிட் லிஸ்ட் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் நயன்தாரா ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்ததற்காக வருந்தியிருக்கிறார். சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கஜினி படத்தில் வரும் சித்ரா கதாபாத்திரத்தில் நடித்ததற்கு வருந்தியதாக தெரிவித்துள்ளார். கஜினி கதையை சொல்லும்போது அவர் கதாபாத்திரம் ஒரு விதமாகவும், படமாக்கப்படும்போது வேறு விதமாகவும் இருந்ததாக கூறியிருக்கிறார்.

thara

கஜினி படத்தின் அசின் அளவுக்கு நயன்தாரா நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல் ‘சந்திரமுகி’ படத்திலும் ஜோதிகா அளவு நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கும். அத்தனை கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பதில்லை, சிலர் நன்றாக நடித்தும் சரியான அங்கிகாரத்தை பெற முடியாமல் இருப்பார்கள். அதுபோலதான் நயன்தாராவுக்கு ‘சித்ரா’ கதாபாத்திரம் கைகொடுக்கவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.