• November
    23
    Saturday

Main Area

Mainநவகிரக குருவா? தட்சிணாமூர்த்தியா? யாருக்கு பரிகாரம் செய்ய வேண்டும்?

தட்சிணாமூர்த்தி,நவகிரக குரு
தட்சிணாமூர்த்தி,நவகிரக குரு

எப்பொழுதெல்லாம் குரு பெயர்ச்சி வருகிறதோ.. அப்பொழுதெல்லாம் பக்தர்கள் குழம்பி போகிறார்கள். நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானையும் (வியாழன்), ஞான குருவான தட்சிணாமூர்த்தியையும் போட்டு குழப்பிக்கொள்ளும் வழக்கம் அண்மைக்காலமாக பக்தர்களிடையே அதிகரித்து வருகிறது. இன்னும் சிலரோ குருபகவானுக்கு செய்யவேண்டிய அனைத்து பரிகாரங்களையும் மோன நிலையில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு செய்து கொண்டிருப்பதை ஆலயங்களில் பார்க்க முடிகிறது. 

god

“அந்த குரு தான் இந்த குரு!” என்று சொன்னது எந்த புண்ணியவான் என்று தெரியவில்லை. கோவில்களில் வியாழக்கிழமைகளில் குரு பரிகாரத்துக்காக கூடும் கூட்டத்தை மனதில் கொண்டும் அதன் மூலம் பல்வேறு விதங்களில் கிடைக்கும் வருவாயை மனதில் கொண்டும், இந்த தவறு சில ஆலயங்களில் அர்ச்சகர்களாலும் அனுமதிக்கப்படுவது தான் கொடுமையின் உச்சம். பல கோவில்களில் இதை வழக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். எனக்கும் சிறுவயதில் இது பற்றிய அறியாமை இருந்திருக்கிறது. சொற்பொழிவு ஒன்றில் ஒரு பெரியவர் இது குறித்து விளக்கியபோது தான் உண்மையை உணர்ந்து கொண்டேன்.

நம் டாப் தமிழ் நியூஸ் வாசகர்களின் குடும்பங்களிலும் இந்த அறியாமை இருக்கக் கூடாது என்று கருதி, இதை எழுதுகிறேன். 
முதலில், குருபகவானுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள். குருபகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களைச் செய்யும் போது, மறக்காமல் அதை குருபகவானுக்கு செய்து அவருடைய நல்லருளை பெறுங்கள்.

dharshanamurthy

வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இது நல்ல ஆரம்பத்தின் அறிகுறி தான். ஆனால், இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக  தட்சிணாமூர்த்தியைச் சுற்றி வருகிறார்கள். கொண்டைக்கடலை மாலையை தட்சிணாமூர்த்திக்கு சாற்றி மனமுருகி வேண்டிக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பக வானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கிறது.  தட்சிணாமூர்த்தியை தென்முகக் கடவுள் என்று சொல்கிறோம். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர் தான் தட்சிணாமூர்த்தி. நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படை யிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

guru

நவக்கிரக குருவான வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். உண்மை இப்படியிருக்க, வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றி வழிபடுகிறார்கள். ஆலயத்தில் தட்சிணாமூர்த்தியிலிருந்து தள்ளி நிற்கும் நவகிரக சந்நிதி வரையில் போய் அர்ச்சனை செய்வதற்கு சோம்பேறித்தனத்தால் அர்ச்சகர்களும் இதை ஆதரிக்கிறார்கள். நவகிரக சந்நிதியில் இடப்பற்றாக்குறையாக இருக்கலாம். இப்படி தவறாக வழிபடுவது தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் இருக்காதா? ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

guru

எந்தவொரு காரியத்தை செய்வதற்கும் குருவருள் முக்கியம். குரு வழிகாட்டினால் தான் நாம் உயரத்திற்கு செல்ல முடியும். அப்படியான நமக்கு கற்றுத் தரும் குருவாகவும், ஞானத்தை தரும் குருவாகவும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்க வேண்டும்.  ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகார த்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.