• October
    16
    Wednesday

Main Area

Main



முன்னாள் அமைச்சரின் உள்ளடி வேலை... மண்டைக் குடைச்சலில் எடப்பாடி..!

நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

சட்டமன்றத் தேர்தலில் ஐ.பெரியசாமியுடம் தோற்ற நத்தம் விஸ்வநாதன் தனக்கு ராஜ்ய சபா சீட்டு தர வேண்டும் என்பதால் மக்களவை தேர்தலில் தான்  எதிர்பார்த்த  திண்டுக்கல் தொகுதியை பாமகவுக்கு விட்டு கொடுத்தார்.  இப்போது ’’எனக்கு ராஜ்யசபா சீட்டு தரணும். என்னை அமைச்சராக பரிந்துரைக்க வேண்டும்’’ என்று குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன் வரிசையில் இப்போது நத்தம் விஸ்வநாதன் ராஜ்யசபா சீட்டு கேட்டு நச்சரித்து வருவது அதிமுகவில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பது மூன்று சீட். ஒன்று பாமகவுக்கு போக மீதி இரண்டு. 

natham viswanathan

அதில் ஒன்றை டெல்லியில் உள்ள பாமக தலைமையின் அழுத்தத்தில் தனது தம்பிக்கு தர பிரேமலதா முயற்சி செய்து வருகிறார்.  மீதமுள்ள ஒரு சீட்டுக்கு கே.பி.முனுசாமி  தனக்கு வேண்டும் எனக் கேட்டு வருகிறார்.  அதனால் யாருக்கு ராஜ்ய சபா சீட், யாருக்கு அமைச்சர் பதவி என்று பரிந்துரை செய்ய முடியாமல் தட்டுத்தடுமாறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.  இதனால், 9 தொகுதியில் ஜெயித்து தற்காலிகமாக ஆட்சியை தக்க வைத்து கொண்டாலும் நிம்மதி இல்லையே என புலம்பி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 

edappadi

தனக்கு எம்.பி., அல்லது சட்டமன்ற இடைத்தேர்தலில் சீட்டு கிடைக்கும் என ஓ.பி.எஸின் தீவிர ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நினைத்தாராம். சீட்டு தராமல் அதிமுக காலை வாரியதால், அவரது ஆதரவாளர்கள் உள்ளடி வேலை பார்த்து விட்டார்கள் என பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.  சீட் கிடைக்காத சிட்டிங் எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் பார்த்த உள்ளடி வேலையால் திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெறவில்லை என பேசிக் கொள்கிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.