• October
    16
    Wednesday

Main Area

Nakkeeran gopal
’நக்கீரன்’ கோபாலுக்கு முதுகெலும்பு என்று ஒன்று இருக்கிறதா?- நெற்றிக்கண்ணைத் திறக்கும் சின்மயி...

2060-ல் பாடகி சின்மயிக்கு 70 வயது ஆகும்போது அவருக்கும் வைரமுத்துவுக்குமான ‘மி டு’ பஞ்சாயத்து சூடாக வலைதளங்களில் அலசப்படுமோ என்று ஐயம் கொள்கிற அளவுக்கு அந்த டாபிக்கை சின்மயியும் அவரைச் சார்ந்தவர்களும் சூடு குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அங்ஙணம் தற்போது பாடகியின் நெற்றிக்கண்ணைத் திறக்கவைத்திருப்பவர் அண்ணன் நக்கீரன் கோபால்.

சமீபத்தில் வெளியாகியிருக்கிற அவரது தரமான சினிமா பத்திரிகையின் உள் அட்டையில் கிளுகிளுப்பான ஒரு நங்கை ஈரப்புடவையுடன் குப்புறப்படுத்தபடி  கோரமாக ஒரு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, அதற்கு குறிப்பாக...நீதி மேட்டர்ல வெடைக்குது சின்மயிங்குற பார்ட்டி...பொள்ளாச்சி மேட்டர் வந்தப்ப இப்பிடி எங்க குப்புற விழுந்துகிடந்துச்சோ’...என்று படு ஆபாசமாகப் போட்டிருக்கிறார்கள்.

சும்மாவே எதற்கெடுத்தாலும் காலில் சலங்கை கட்டி ஆடும் சின்மயி இதைப்படித்து ட்விட் போடாவிட்டால் எப்படி? அந்த உள் அட்டைப் படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு,.. ‘நக்கீரன்’ கோபாலுக்கு தொடர்ந்து என் மீது அப்படி என்னதான் உறுத்தலோ...அவர் ஏன் இவ்வளவு அறுவெறுப்பாக நடந்துகொள்கிறார்? வைரமுத்துவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் இப்படி நடந்துகொள்கிறார் என்றால்...வைரமுத்துவின் அத்தனை சமாச்சாரங்களும் அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும் தானே? வைரமுத்துவைக் கேள்வி கேட்க நக்கீரன் கோபால் உட்பட முதுகெலும்புள்ள ஒருவர் கூடவா தமிழ்நாட்டில் இல்லை? என்று அப்பதிவைத் துவக்கி வைத்திருக்கிறார் சின்மயி.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களின்போது நரம்புகள் புடைக்க கோபால் குரல் எழுப்பியபோதே அவரது இந்த ‘சினிக்கூத்து’ இதழின் செக்ஸ் அவதாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இப்போது அதே சமாச்சாரத்தை சின்மயி கையில் எடுத்து அசிங்கப்படுத்தியிருப்பது அண்ணாச்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தப்போவது நிச்சயம்.

Aarthi Tue, 05/21/2019 - 09:31
chinmayi Nakkeeran gopal ராய் லட்சுமி சினிமா

English Title

chinmayi spoke about nakkeeran gopal

News Order

0

Ticker

1 பொள்ளாச்சி விவகாரம்; நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றம்!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக நக்கீரன் கோபால், சபரீசன் உள்ளிட்டோர் மீதான 5 வழக்குகளும் சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது.

pollachi

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரில் முன் ஜாமின்  கோரி நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

sabareesan

இதனிடையே, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதவிர மேலும் 3 வழக்குகளையும் வேறு சில நபர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நக்கீரன் கோபாலின் முன்ஜாமின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நக்கீரன் கோபால், சபரீசன் உள்பட பலர் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

highcourt

இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்,  இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே மனுதாரர் தேவைப்படும் போது முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

smprabu Wed, 03/20/2019 - 21:22
Nakkeeran gopal pollachi rape pollachi video CBI High court Sabareesan நக்கீரன் கோபால் (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Pollachi rape case; nakkheeran gopal, sabareesan cases changed to CBI

News Order

0

Ticker

0 பொள்ளாச்சி விவகாரம்; முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் உயர் நீதிமன்றத்தில் மனு!

சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக கூறப்பட்டுள்ள புகாரில் முன் ஜாமின் கோரி நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.

பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது. தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரில் முன் ஜாமின்  கோரி நக்கீரன் கோபால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இளம்பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

smprabu Mon, 03/18/2019 - 20:51
Nakkeeran gopal pollachi rape pollachi video நக்கீரன் கோபால் (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Pollachi rape video case: Nakkeeran Gopal files Anticipatory bail in chennai high court

News Order

0

Ticker

0 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோ; பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலுக்கு சம்மன்!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வான்கொடுமை விவகாரத்தில், நக்கீரன் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கோபாலுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களிடம் முகநூல் மூலம் உள்ளிட்டவைகள் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து. அந்த மாணவிகளை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வந்துள்ளது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன்ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி, அதில் இருக்கும் பெண்களின் கதறல் நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சியின் தலையீடும் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை உறுதிபடுத்தும் விதமாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பார் நாகராஜன் என்பவரை அதிமுக அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கியது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கொடூர கும்பல், பெண்ணை அடித்து, மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய வீடியோ ஒன்றை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவை துணை பொள்ளாச்சி ஜெயராமன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில், நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறையான சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், நாளை காலை 11 மணிக்கு அவர் சென்னை பழைய கமிஷனர் அலுவலத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிடக்கூடாது என பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த கோரிக்கையை ஏற்க முடியாது. குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்பதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டது என நக்கீரன் கோபால் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

smprabu Thu, 03/14/2019 - 21:08
Nakkeeran gopal pollachi rape pollachi video நக்கீரன் கோபால் (கோப்புப்படம்) தமிழகம்

English Title

Pollachi rape video: TN Police Summons Nakkeeran Gopal

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.