• April
    05
    Sunday

Main Area

Main



மலேசியாவில் வானத்தில் தோன்றிய நெருப்பு பந்து! ஏலியன் ஊடுருவலா?... மக்கள் அச்சம்! 

malaysia
malaysia

வால் நட்சத்திரங்கள் வானில் தென்படுவது அரிது. அதனை வெகு சிலரே பார்த்திருப்பர். வால் நட்சத்திரத்தைப்  பார்ப்பது அதிர்ஷ்டம் என்று பலர் கருதுகின்றனர். வால் நட்சத்திரம் வானில் பறந்து போவதைப் பார்த்தவுடன் மனதில் ஏதேனும் நினைத்துக்கொண்டால் அது உடனே நடக்கும் என்பது பலரின் நம்பிக்கை.

சில நாட்களுக்கு முன்பு, மலேசியாவின் ஒரு பகுதியில் வால் நட்சத்திரம் போன்ற காட்சி தென்பட்டிருக்கிறது. ஆனால், வானத்தில் பெரிய நெருப்பு பந்து போல தோற்றமளித்திருக்கிறது. அந்த வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. ஒரு சிலர் தாங்களும் கூட இந்த நிகழ்வைக் கண்டதாகக் கமெண்ட் செய்திருந்தனர்.

இந்த காட்சிகளைப் பற்றி சர்வதேச விண்கல் அமைப்பின் வலைத்தளத்திலும் தெரிவிக்கப்பட்டன, அவற்றில் நான்கு துல்லியமானவை. இருப்பினும், இந்த நெருப்பு பந்து தோற்றத்தைப் பற்றி, நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் எதுவும் பதிவு செய்யவில்லை.

பிப்ரவரி 12 ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் ஜொகூர் பஹ்ரு பகுதியில் வானத்தில் காணப்பட்ட இந்த நெருப்புபந்து விண்கல்லா? செயற்கை கோளா? அல்லது விண்கலமா? என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

 

2018 TopTamilNews. All rights reserved.