• February
    28
    Friday

Main Area

Main



மட்டன் சுக்கா தெரியும்... அதென்ன உருளைக்கிழங்கு சுக்கா..!

உருளைக்கிழங்கு சுக்கா
உருளைக்கிழங்கு சுக்கா

உருளைக்கிழங்கு சுக்கா

potato

உருளைக்கிழங்கு என்றாலே பொரியல், வறுவல், ஃபிங்கர் ஃப்ரை, குருமா என்று தான் சாப்பிட்டிருப்போம். குழந்தைகள் மட்டுமல்லாமல் நம்மில் பலரும் உருளைக்கிழங்கு பிரியர்களாகவே இருக்கிறோம். வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சுக்கா தயாரிப்பதும் எளிது. இதன் சுவையும் அற்புதம்.
தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 20 
நா.தக்காளி - 5 
பூண்டு            -5பல்
காய்ந்த மிளகாய்    -5
சீரகம்            -1டீஸ்பூன்
தனியா            -1டீஸ்பூன்
மஞ்சள் பொடி    -1டீஸ்பூன்
உப்பு             -ருசிக்கேற்ப
எண்ணெய்          -தேவையான அளவு
வரமிளகாய் - 8
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 10 பல்
செய்முறை:

potato

காய்ந்த மிளகாய், சீரகம், தனியா, பூண்டு,மஞ்சள் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை  தனியாக  எடுத்து, நன்கு கழுவி வேக வைத்து, தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து, நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும். அதற்குப் பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். நன்றாக கிளறியவுடன், அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு, மசாலா உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளற வேண்டும். அவ்வளவு தான். சுவையான  உருளைக்கிழங்கு சுக்கா தயார். சப்பாத்தியுடன் இதனைச் சேர்த்து சாப்பிட்டால், ருசி அபாரமாக  இருக்கும்.   தக்காளிக்குப் பதிலாக கடைந்த கெட்டியான  தயிரை ஊற்றி சமைத்தால், சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

2018 TopTamilNews. All rights reserved.