kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Murder
தம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்! டாஸ்மாக்கில் அடுத்தடுத்த நடந்த இரட்டைக் கொலை!

தமிழகத்தில் தெருவிற்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளினால் தினம் தினம் ஏதாவதொரு பகுதியில் கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்துதல், போலீசாரிடம் வாக்குவாதம் என்று குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தமிழகத்தில் நிறைய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வந்தாலும், சிசிடிவி கேமிராக்கள், குற்றங்கள் நடைப்பெற்ற பின்னர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு தான் உதவியாய் இருக்கிறதே தவிர, குற்றச்செயல்கள் நடைப்பெறாமல் இருக்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுப்பதேயில்லை என்கிற கருத்து மக்களிடையே பரவலாக இருக்கிறது.

tasmac

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் நடைப்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருடைய  மகன் ஆனந்த் (37). டூ வீலர் மென்கானிக்கான இவர் திருமணத்திற்கு பின் பெரம்பலூர், நல்லறிக்கை கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சண்முகம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த், சண்முகத்துக்கு இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. நேற்றிரவு நல்லறிக்கை டாஸ்மாக் கடையில் சண்முகம், ஆனந்த் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய ஆனந்த், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த ஆனந்த்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகத்தை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்தார்.

murder

இதனிடையே, இத்தகவலை அறிந்த சண்முகத்தின் மூத்த சகோதரர் முருகானந்தம் ஆத்திரமடைந்து ஆனந்தைத் தேடி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே ஆனந்த் உயிரிழந்தார். டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் அடுத்தடுத்து இருவருமே பலியானார்கள். தற்போது கொலை செய்த முருகானந்தம் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

gowtham Mon, 09/16/2019 - 17:53
Murder tasmac இரட்டைக் கொலை தமிழகம் க்ரைம்

English Title

Brother who stabbed his brother in the next half an hour! Subsequent double murder in Tasmaq!

News Order

0

Ticker

0 
 விவேக்-முருகேசன்

'மெதுவா போங்கடான்னு சொன்னது ஒரு குத்தமா?' இருவரை வெட்டிக்கொன்ற கும்பல்!

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்த குளம் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த அவர்களை 7 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளது.


 கொலை

முகத்தில் ஸ்ப்ரே அடித்து நடுரோட்டில் வெட்டிக் கொலை! நாடி பிடித்து உயிர் போனதைப் பார்த்த கும்பல்!

தென்னக ரயில்வேயில் ஏ.ஐ.ஓ.பி.சி யூனியனில் நீண்ட காலமாக பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர் ஜே.கே.புதியவன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக...


 இளைஞன்

கொலை செய்து விட்டு பதற்றமில்லாமல் பால்கனியில் கஞ்சா அடித்த இளைஞன்! 

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற காரணத்தால் 1998 ஆம் ஆண்டு துப்பாக்கிச்சூடு வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்கப்பட்டவர் ஜோர்டான். இவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் வீட்டில் ...


கொலை

தாயை மீட்க மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்! |மகனைக் கொலைக்காரனாக்கி தாய்! 

சத்துணவு அமைப்பாளராக தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாரதிபுரத்தில் வசிப்பவர் திலகவதி. கணவரை இழந்து வசித்து வரும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த... மணிமேகலை

நண்பனுக்காக மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவர்: அதிர்ச்சி தரும் சம்பவம்

நண்பர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் மனைவியை ஆட்டோ டிரைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
ஐஸ்கிரீம்

ஏன்டா ஐஸ்கிரீம் வாங்கித் தரல?.. காதலனை கொன்ற காதலி

ஐஸ்கிரீம் கேட்ட காதலிக்கு, அதை வாங்கித் தர மறுத்து உடல் எடை குறித்தும் கிண்டல் அடித்ததால் ஆத்திரமடைந்த காதலி அதே இடத்திலேயே குத்திக் கொன்ற சம்பவம் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெரும...


கொலை

'கண்ணை மறைத்த காதல்' : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொன்று எரித்த மகள் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். மணிகண்டன்

தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்: நெல்லையில் பரபரப்பு!

கட்டிட தொழிலாளி ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


MURDER

உணவகத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த கும்பல்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் உணவகம்  ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று ஒருவரை சரமாரியாக வெட்டும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. 


மணிகண்டன்

மகளை கிண்டல் செய்த இளைஞரை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம் : குடிபோதையில் வெறிச்செயல்!

மகேஸ்வரன் தனது நண்பர்களான மீனாட்சி சுந்தரம், மாரி ஆகியோருடன் வந்து மணிகண்டனிடம் உன்னை கொல்லாமல்  விடமாட்டேன்' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.


கொலை

உன் கணவனுக்கு துரோகம் செய்யும் நீ எனக்கு துரோகம் செய்ய மாட்டாய் என என்ன நிச்சயம்? கள்ளகாதலியை லாட்ஜில் வைத்து கொன்ற கொடூரம்!

சென்னை பெரியமேட்டில், லாட்ஜில் வைத்து கள்ளக் காதலியைக் கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கார்த்திகேயன் -பாரதி

மனைவி இறந்த சோகத்தில் மாற்றுத்திறனாளி மகனை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவர்; கலங்க வைக்கும் சம்பவம்!

மனைவி இறந்ததால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்துவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உமா மகேஸ்வரி

'முன்னாள் மேயர் கொடூர கொலை' : குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

நெல்லை முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரைப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியு...

2018 TopTamilNews. All rights reserved.