darbar
  • January
    17
    Friday

Main Area

Main



என்னது.. வனிதாவை கோபத்தில் முகின் அறைந்துவிட்டாரா? 

முகின்- வனிதா
முகின்- வனிதா

சென்னை: வனிதாவை கோபத்தில் முகின் அறைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா மக்கள் மத்தியில் கடும் வெறுப்பைச் சம்பாதித்து இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறிய பின்பு சண்டை சச்சரவு குறைவானதால் நிகழ்ச்சியின் டிஆர்பி குறைந்துவிட்டது. அதனால் கஸ்தூரியை வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் குழு இறக்கியது.  ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு கன்டென்ட் கொடுக்காததால் மீண்டும் பிக்பாஸ் குழு சண்டக்கோழி வனிதாவை விருந்தாளியாக உள்ளே அனுப்பிவைத்துள்ளது.

வந்த முதல் நாளே வனிதா தனது வேலை காட்டிவிட்டார். அவரின் முதல் டார்கெட்டே அபிராமி- முகின் காதலை பிரிப்பது தான். அதை சரியாக ஒரே நாளில் முடித்துவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மதுமிதாவை கொம்பு சிவி விட, மதுமிதா ஆண்கள் மீது பழி போட்டு பிக் பாஸ் வீட்டையே இரண்டாகிவிட்டார். 

இந்த நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வனிதா மேலும் மேலும் சண்டை மூட்டிவிடுவதால் ஆத்திரமடைந்த முகின் வனிதாவை கோபத்தில் அறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வனிதா பிக் பாஸ் வீட்டை வனிதா வெளியேறியுள்ளதாகவும், முகினுக்கு ரெட் கார்டு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது வதந்தியா இல்லை உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்துள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   
 

2018 TopTamilNews. All rights reserved.