• October
    14
    Monday

Main Area

Main



மாடு முட்டியதால் தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த மாமியார் - மருமகள்: வேலூரில் பரபரப்பு!?

மீட்புப்பணி
மீட்புப்பணி

வேலூர்: மாடு முட்டியதில் மாமியாரும் மருமகளும் 80 அடி  கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சின்னகந்திலி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரது மருமகள் நிர்மலா. கடந்த இரு  தினங்களுக்கு முன்பு மாமியாரும் மருமகளும் தங்களுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது விளைநிலம் அருகே  சென்ற அவர்களது மாடு ஒன்று மிரண்டு ஓடியுள்ளது. இதைக்கண்ட நிர்மலாவும், முனியம்மாளும் அதைத் தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் மாடு அவர்களை முட்டி தள்ளியுள்ளது.

cow

இதில் நிலைதடுமாறி மாமியாரும் மருமகளும் அருகிலிருந்த 80 அடி  கிணற்றில் விழுந்துள்ளனர். கிணற்றில் தண்ணீர் இல்லாததால், இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதிவாசிகள் தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு நிர்மலாவையும், முனியம்மாளையும் மீட்பு பனி வீரர்கள் மீட்டுள்ளனர்.

cow

இதைத் தொடர்ந்து  மாமியாரும், மருமகளையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.