darbar
  • January
    24
    Friday

Main Area

Main



கார்ப்பரேட் நிறுவனம் போல ஸ்டாலின் கட்சியை நடத்துகிறார் : பழ.கருப்பையா விமர்சனம் !

pazha karuppaiyah - MK stalin
pazha karuppaiyah - MK stalin

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா, முன்னதாக அதிமுக வில் இருந்து விலகிய நிலையில் இன்று திமுகவில் இருந்தும் விலகியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கார்ப்பரேட் நிறுவனம் போன்று திமுக நடத்தப்படும் விதம் திமுக மீது சலிப்பை ஏற்படுத்தி விட்டது. அதனால் ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்து விட்டு அக்கட்சியில் இருந்து வெளியே வந்து விட்டேன் என்று தெரிவித்தார். அவர் அக்கட்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். 

ttn

அந்த அறிக்கையில், "சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் திமுகவில் சேர்வது எனக்குத் தயக்கம் இருந்தது. ஒரு பொது விழாவில் கலைஞர் மிகைபடச் சொன்னாரே என எண்ணும்  அளவுக்கு என்னை வலியுறுத்தி அழைத்தார். கலைஞர் மறைந்த பிறகே திமுக விட்டு வெளியேறுவது குறித்து சிந்தித்தேன் பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்புணர்வு, நாடாளுமன்றத் தேர்தல் என இவற்றின் காரணமாக அந்த முடிவு தள்ளிக்கொண்டே போய்விட்டது.

ttn

கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனை பாங்குகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகின்ற வீதம் அறிவும், நேர்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பணமே எல்லாம் என்று கருதுகின்ற தன்மை இவையெல்லாம் என்னிடம் பெரிய மன சலிப்பை உண்டாக்கியது. இவற்றோடு ஒத்து போக முடியாத நிலையில் திமுகவை விட்டு ஒதுங்கிக் கொள்வது என்றும் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகிக் கொள்வது என்று முடிவெடுத்தேன் நேரடியாக ஸ்டாலினை பார்த்து விடைபெற்றுக் கொண்டேன்.

 

ttn

ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலை பொது வாழ்வின் அங்கமாக ஏற்பது, உட்கட்சியைக் கூட விமர்சிக்க முடியாதவாறு கட்சியும் விசுவாசம் என்னும் பெயரால் அவற்றை நிலைநாட்டுவது, இவையெல்லாம் எந்த வகையிலும் பொதுவாழ்க்கைக்கு ஏற்புடையவை அல்ல. மாநிலங்களை பல கூறுகளாக உடைப்பது இந்தியாவை இந்து என்னும் பொது அடையாளத்துக்குள் கொண்டு வருவது இவையெல்லாம் மொழிவழி இன உணர்வை சிதைக்கின்ற பங்குகளாகும்.

இதில் உள்ள ஆபத்தை திமுக சரியாக புரிந்து கொண்டு இருக்கிறது என்று என்னால் கருத முடியவில்லை. வெறும் ஒரு நாள் அறிகுறிகளோடு இவை எல்லாம் முடிந்து விடுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக ஊழலை இடப்பெயர்ச்சி செய்கிறது இது அல்ல மாற்று அரசியல் என்னும் கருத்து என்னுடைய விலகலுக்கான காரணம் " என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.