• February
    25
    Tuesday

Main Area

Main



தந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா? தமிழக அரசு மீது ஸ்டாலின் பாய்ச்சல்

mk stalin
mk stalin

சென்னை: குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி அடையாளத்தோடு குறிப்பிடப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாளில் “திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்?” என ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது. அதற்கான பதில் விருப்பமாக 4 தலைவர்கள் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் தந்தை பெரியாரின் பெயர், “இ.வெ.ராமசாமி நாயக்கர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேசமயம், தமிழக முன்னாள் முதல்வர் ராஜகோபால் ஆச்சாரியாரின் பெயர், ‘ராஜாஜி’ என்றும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பெயர் ‘காந்திஜி’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பேரறிஞர் அண்ணாவின் பெயரும் ‘சி.என்.அண்ணாதுரை’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், “குரூப் 2  வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா? 

ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதன் சுருக்கமே ஈ.வெ.ரா. ; அதுகூட தெரியாமல் இ.வெ.ரா என கேட்பதா? வினாத்தாளை தயாரித்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்” என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.