• November
    21
    Thursday

Main Area

Main



6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு ! தாய் நெகிழ்ச்சி !

missingchild
missingchild

6 வயதில் காணாமல் போன சிறுவன் 26 வயதில் இளைஞனாக தாய்க்கு கிடைத்த நெகிழ்ச்சியான சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா கணவரை இழந்தவர். விவசாயக் கூலி வேலை செய்து மகன் மற்றும் மகளை காப்பாற்றி வந்துள்ளார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 6 வயது மகனை மரத்தடியில் அமர வைத்து விட்டு, வயல் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மகன் காணாமல் போய்விட்டார்.

gotchild20years back

பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில் மகளை அழைத்துக்கொண்டு பெங்களூரில் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார். எப்போதாவது சொந்த ஊருக்கு வந்து மகன் கிடைத்தானா என்று கிராம மக்களிடம் கேட்டுவிட்டு செல்வார். இந்நிலையில் மகளும் பெரியவளாகி விட்டதால் அவருக்கு திருமணம் செய்துவிட்டு சொந்த ஊரான திருமாந்துரைக்கே வந்துவிட்டார். இதற்கிடையே ராமநத்தத்தில் வசிக்கும் உறவுக்கார பெண் ஒருவர் தொழுதூர் பகுதியில் கூலி வேலைக்குச் சென்றபோது, இந்திராவின் கணவர் சரவணன் போலவே ஒருவர் தன்னுடன் வேலை செய்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவரைத் தேடி சென்று இந்திரா விசாரித்தபோது, அவர் தனது பெயர் இம்ரான் என்றும், தனது தந்தை அபிபுல்லா ராமநத்தத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அபிபுல்லாவை சந்தித்த இந்திரா 6 வயதில் தன் மகனை தொலைத்து விட்டதாகவும் அவன்தான் தங்களிடம் வளர்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதை கேட்ட அபிபுல்லா 15 ஆண்டுகளுக்கு முன்னர் 10 வயது சிறுவனாய் தெருவில் அழுது கொண்டு இருந்ததாவும், அவனை அழைத்த வந்து வளர்த்து வந்ததாகவும் கூறினார். இதுகுறித்து இந்திரா காவல்துறையிடம் முறையிட விசாரணை செய்த ராமநத்தம் போலீசார், இம்ரான் என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்த இளைஞர், இந்திராவின் மகன்தான் என்பதை உறுதி செய்து தாயுடன் அனுப்பி வைத்தனர்.

 

6 வயதில் காணாமல் போன போது அந்த சிறுவன் 10 வயது வரை ஒரு பெரியவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளா. ஆனால் அவர் விட்டுச் சென்றதால் அபிபுல்லாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார் அந்த சிறுவன்.

2018 TopTamilNews. All rights reserved.