• March
    31
    Tuesday

Main Area

Main



'நீங்க ஒரு இன்ஸ்பிரேஷன்' குவாடன் பேலஸுக்கு வாழ்த்து தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்!

Minister Vijayabaskar
Minister Vijayabaskar

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வரும் 9 வயது சிறுவனான குவாடன் பேலஸ் உடல் வளர்ச்சி குன்றியிருக்கிறார். அவரை அவரது பள்ளி மாணவர்கள் எல்லாரும் கிண்டல் செய்தனர். இதனால், மனமுடைந்த சிறுவன், தன்னை கொன்று விடும் படி தன் தாயாரிடம் கதறிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. இதனையடுத்து அந்த சிறுவனுக்கு உதவுவதற்காக பல்வேறு தரப்பினர் குவாடனுக்கு நிதி உதவி அளித்தனர். அந்த பணம் மொத்தமாக இந்திய மதிப்பில் 3.40 கோடி ரூபாய் திரண்டது. 

ttn

அதனை தனக்கு மக்கள் அளித்த பணம் என்று கருதாமல், குவாடன் அந்த பணம் முழுவதையும் அவரை போன்று உள்ள குழந்தைகளை வளர்க்கும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரின் இந்த உதவி மனப்பான்மைக்கு பல தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதே போல அமைச்சர் விஜயபாஸ்கரும் வாழ்த்துக்கள் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

ttn

அதில், குவாடன் பேலஸ் நீங்கள் தனித்துவமானவர்! குழந்தைப்பருவத்திலேயே $470,000 பணத்தை உங்களை போன்று பிறக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உங்கள் கனவுகள் நனவாகும் என்று நான் விரும்புகிறேன். உலகிற்கு உங்களைப் போன்ற அழகான மனிதர்கள் தேவை, நீங்கள் ஒரு உத்வேகம் !!" என்று பதிவிட்டுள்ளார். 


 

2018 TopTamilNews. All rights reserved.