• April
    04
    Saturday

Main Area

Main



தமிழக மக்கள் குடிப்பதால்தான் வருவாய் அதிகரித்துள்ளது! - அமைச்சர் தங்கமணி 

P. Thangamani
P. Thangamani

தமிழக மக்கள் அதிக அளவில் குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது, இதில் அரசு என்ன செய்ய முடியும் என்று அமைச்சர் தங்கமணி கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பட்ஜெட் விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று தமிழக அரசு டாஸ்மாக் வருவாயை மட்டுமே நம்பியுள்ளதா,படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.
"ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் விற்பனை நேரமும் குறைக்கப்பட்டது.ஆனால், தமிழக மக்கள் குடிக்கிறார்கள். அதனால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது.இதில் தமிழக அரசு என்ன செய்ய முடியும்.
தி.மு.க-தான் ஒரே நாளில் மதுவிலக்கு என்று கூறியது.நாங்கள் படிப்படியாக அமல்படுத்துவோம் என்றுதான் கூறினோம்.மொத்தமாக மூடுவோம் என்று கூறவில்லை. மதுவிலை உயர்ந்துள்ளதால் டாஸ்மாக் வருவாயும் அதிகரித்துள்ளது" என்றார்.தங்கமணியின் பொறுப்பான பதிலால் எம்.எல்.ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர்.கூட்டணிக் கட்சித் தலைவரான ராமதாஸ் கூட்டணி தர்மத்துக்காக இதையும் வரவேற்பாரா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.