• August
    24
    Saturday

Main Area

Main



சாதிக்கயிறு குறித்த சர்ச்சையான பதில்: திடீரென்று 'அந்தர் பல்டி' அடித்த அமைச்சர்!

சாதிக்கயிறு
சாதிக்கயிறு
Loading...


சென்னை:  சாதிக்கயிறு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செங்கோட்டையன் தனது கருத்திலிருந்து திடீரென்று பின்வாங்கியுள்ளார். 

பள்ளிக்கல்வித் துறைக்கு  2018 தமிழ்நாடு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று   மாணவர்களைச் சாதிவாரியாகக் கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி,  கண்டறிந்து,  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார். 

students

இதுகுறித்து பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது தனது கவனத்திற்கு வரவில்லை. ஆகவே மாணவ, மாணவியர் வண்ணக்கயிறு கட்டவும், நெற்றியில் திலகமிடுவதையும் தடுக்கக்கூடாது' என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா வரவேற்பு தெரிவித்ததோடு, அமைச்சர் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்லாமல் விட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

sengotaiyan


இந்நிலையில் முன்னதாக தான் கூறிய கருத்திலிருந்து மாறுபட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 'பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்துள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.