• October
    16
    Wednesday

Main Area

Main



தண்ணீர் பஞ்சத்தை அரசியலாக்க வேண்டாம்: எங்களுடன் சமாளியுங்கள்; அதிமுக அமைச்சர் வேண்டுகோள்!

தண்ணீர்
தண்ணீர்

சென்னை: தண்ணீர் பஞ்சத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

water

சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறையால் மக்களின் இயல்பு வாழ்க்கை  முடங்கி உள்ளது. பள்ளிகள். அலுவலகம் என அனைத்து இடங்களிலும் இதே பிரச்னை தான் பின் தொடர்கிறது. பெரும்பாலான ஐடி நிறுவனங்களில்  வீட்டிலிருந்தே பணிபுரியச் சொல்லும் அளவுக்கு நிலைமை வழக்கத்தை விட மோசமாகியுள்ளது. தண்ணீரால் சில இடங்களில் கொலை சம்பவமும் நடந்தேறியுள்ளது. இருப்பினும் சென்னை குடிநீர் வாரியம் தங்களால் இயன்ற அளவுக்கு குடிநீரை வழங்கி வருகிறது. 

jayakumar

இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்,   மழை இல்லாத நிலையிலும் அரசு எப்படி மக்களின் தேவையைச்  சமாளித்து வருகிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க 499 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. அதனால் தண்ணீர் பஞ்சத்தை வைத்து அரசியல் செய்யாமல் அரசுடன் இணைத்து எதிர்க்கட்சிகள் பணியாற்ற வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
 

2018 TopTamilNews. All rights reserved.