kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


தன்னுடைய ஆசிரியரின் அன்பு வேண்டுகோளை நிறைவேற்றிய அமைச்சர் ஜெயகுமார்! இவ்வளவு நல்ல மனுஷனாப்பா இவரு... 

jayakumar
jayakumar
Loading...

குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரிய பொதுமக்களின் வேண்டுகோளை அமைச்சர் ஜெயக்குமார் நிறைவேற்றி வைத்தார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நமச்சிவாய தெருவில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை 62 இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே குடிநீர் குழாய் அமைந்துள்ளது. மதுக்கடைக்கு குடிக்க வருபவர்கள் தினமும் இரவு குடித்துவிட்டு குப்பைகளை தெருவிலேயே போட்டு விட்டு செல்வதாகவும், சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை காலை 11 மணிக்கே கடை வாசலில் காத்திருப்பதால் அந்த தெருவில் குடியிருக்கும் பெண்களும், குழந்தைகளும் அந்த பகுதியில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும், பல போராட்டங்கள் நடத்தியும் அந்த கடையை அங்கிருந்து அகற்ற முடியவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசரியரும், அமைச்சர் ஜெயகுமாருக்கு 8 வது வகுப்பு அறிவியல் பாடம் எடுத்த ஆசிரியருமான நாராயணசாமி அப்பகுதி மக்களுடன் இணைந்து டாஸ்மாக் கடையை அகற்றி தரும்படி அமைச்சர் ஜெயகுமாருக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தார். தனது ஆசிரியரின் அன்பான வேண்டுகோளை ஏற்று கொண்ட அமைச்சர் அங்கிருந்த டாஸ்மாக் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அமைச்சரின் உத்தரவை தொடர்ந்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. 

ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் ஜெயகுமார் டாஸ்மாக் கடையை மூடியதற்கு அவருடைய ஆசிரியர் மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களும் அமைச்சர் ஜெயகுமாரிக்கு நன்றி தெரிவித்தனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.