• August
    21
    Wednesday

Main Area

Main



தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார்- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

Jayakumar
Jayakumar
Loading...

தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் தூங்கும் படம் வாட்சப்பில் வெளியாகி வருகிறது, பாவம் தென் சென்னை தொகுதி மக்கள் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பெருந்தலைவர் காமராசரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “ உலகப்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து தோற்பது போல் ஒரு தோற்றம் இருந்தது ஆனால் நியூசிலாந்து தோற்றுவிட்டது அதே போல்தான் அரசியலிலும் திமுக ஜெய்பது போன்ற ஒரு மாயை இருந்தாலும் இறுதியில் இங்கிலாந்தை போல் அதிமுகவே வெல்லும் நியூசிலாந்து போல திமுக தோற்கும். தமிழச்சி தங்க பாண்டியன் என்னை பொய்யர் என்கிறார் ஆனால் திமுகவினர்தான் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர்கள். தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் தூங்கும் படம் வாட்சப்பில் வெளியாகி வருகிறது” என்று கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.